Tuesday, April 14, 2009

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் மருத்துவர் ராமதாஸ் சந்திப்பு.

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் மருத்துவர் ராமதாஸ் சந்திப்பு.
சென்னை13: மருத்துவர் ராமதாஸ் அவர்கள் மண்ணடியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்தில் அதன் நிர்வாகிகளை சந்தித்து தான் சார்ந்துள்ள கூட்டணிக்கு ஆதரவு கோரினார்.

திமுகவுடன் நேசம்கொண்டிருந்த மனிதநேய மக்கள் கட்சிக்கு அதன் மக்கள் செல்வாக்கை சரியாக புரிந்து கொள்ளத் தெரியாத அரசியல் சானக்கியன்(?) ‍என்று சொல்லக்கூடிய கலைஞர்கள் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்காததால் அதன் கூட்டணியிலிருந்து மனிதநேய மக்கள் கட்சி விலகியது. அதிமுகவிலிருந்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன அதிலும் நமது கோரிக்கைகள் செவிசாய்க்கப்படவில்லை.

சமுதாய நலன் கருதி தனித்தே களம்காண்பது என்ற முடிவில் புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி போன்ற அமைப்புகளிடம் கூட்டணி பேசப்பட்டு தொகுதி பங்கீடுகள் நடைபெற்று வருகின்றன இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் புதன் கிழமை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூட்டணி தலைவர்களுடன் மனிதநேய மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யும்.

இந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அதன் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தனது கூட்டணிக்கு ஆதரவு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 1 மணிநேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது அப்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மநிலத் தலைவர் பேராசிரியர் ‍எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ.ஹைதர்அலி , மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் காஞ்சி அப்துல் சமது மற்றும் பொருளாளர் ஹாருன் ரசீது ஆகியோர் இருந்தனர் பின்பு கூட்டாக பத்திரிக்கையாளர்களுக்கு நேர்கானல் அளித்தனர்.

No comments:

Post a Comment