Saturday, April 25, 2009

மயிலாடுதுறை ம.ம.க வேட்பாளர் கும்பகோண் பிஷப்பிடம் ஆதரவு கேட்டார்.

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லாஹ் கும்பகோணம் பிஷப்பிடம் ஆதரவு கேட்டார்


கும்பகோணம்,ஏப்.25
மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவா ருல்லா குடந்தை மறை மாவட்ட ஆயரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

பிஷப்பிடம் ஆதரவு
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட் பாளரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவருமான ஜவாருல்லாஹ் தனது கட்சி யினருடன் நேற்று கும்பகோணம் பிஷப் ஹவுஸில் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணி சாமியை நேரில் சந்தித்து தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் பிஷப் பிடம் ஆலோசனை நடத்திய அவரிடம் பிஷப் அந்தோணி சாமி, பல நல்ல காரியங்களை செய்ய நாங்கள் எப்போதும் ஒத்துழைப்பு நல்குவோம் என்று தெரிவித்தார்.

10 கட்டளைகள்
அவரிடம் த.மு.மு.க சார்பில் இஸ்லாமிய மக்களுக்கு செய்துள்ள தொண்டுகள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது அந்தோணிசாமி கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் சார்பில், வாக்காளர்களுக்கு பத்து கட்டளைகள் என்று தயாரிக் கப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தை ஜவருல்லாவிடம் பிஷப் வழங்கினார்.

கிறிஸ்தவர்களிடம் வரவேற்பு
பின்னர் நிருபர்களிடம் ஜவாருல்லா கூறிதாவது:
மயிலாடுதுறை பாராளு மன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் நான் போட்டியிடுகிறேன்.

த.மு.மு.க.வினர் பேராதர வோடு தொடங்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி 15வது நாடாளுமன்ற தேர்தலில் புதியதமிழகம், இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு போட்டியிடுகிறது. சமூக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவு தந்துள்ளது. சிறுபான்மையினர் அரசியலில் சுயமுகவரியுடன் வருவதை கட்சிகள் விரும்பாததால், செயல்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளோம். மயிலாடுதுறை தொகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற் சாலைகளை அமைப்பேன். சிறு சிறு அணைக்கட்டுகள் ஏற்படுத்தி ஆக்கப்பூர்வ வளர்ச்சிக்கு பாடுபடுவேன். தரமான கல்லூரிகள், மருத்துவக்கல்லூரி அமைக்க பாடுபடுவேன். மனித நேய மக்கள் கூட்டணிக்கு கிறிஸ்தவர்கள் அமைப்பிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரு கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தியாகிகள் கோரிக்கை
பின்னர் ஜவாருல்லாஹ் பட்டீஸ்வரத்திலுள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் நலச் சங்கத்திற்கு சென்று தியாகி களிடம், அவர்களது கோரிக் கைகள் பற்றி கேட்டறிந்து, அவர்களிடம் ஆதரவு திரட்டினார். தியாகிகள் நலச் சங்கத்தின் மாவட்டதலைவர் கணேசபஞ்சாபிகேசன் மற்றும் தியாகிகள் ஜவாஹிருல்லாவிடம் 8 அம்ச கோரிக்கைகள் பற்றி எடுத் துரைத்தனர். கோரிக்கைகள் நிறைவேற தான் பாடுபடுவதாக தியாகிகளிடம் ஜவாஹிருல்லா உறுதி அளித்தார்.
மாநில மாணவரனி செயலாளர் அமீன், மாவட்ட செயலாளர் முகமது சுல்தான், உமர் ஜஹாங்கீர், த.மு.மு.க. மாவட்ட தலைவர் முகமது செல்லப்பா, மாவட்ட செயலாளர் கனி, மக்கள் தொடர்பு அலுவலர் சலீம் உள்பட பலர் ஜவாருல்லாவுடன் சென்றனர்.
நன்றி: தின்த்தந்தி 25-4-2009

No comments:

Post a Comment