










மண்டிய இருள்கிழிக்கும் மக்களின் எழுச்சி! மாற்று அரசியலுக்கான மாபெரும் புரச்சி!











எங்கள் கட்சி தொண்டர்கள் தன்னலம் பாராமலும், பசியறியாமலும் ஆற்றிய பணிகளால் இன்று தொகுதி முழுவதும் மக்கள் மனித நேய மக்கள் கட்சி பற்றி பேசி வருவதை காணமுடிகிறது.எனது வெற்றி உறுதி என்பதால் மற்ற கட்சியினரிடம் எங்களை பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். என் மேல் தவறான குற்றச்சாட்டுகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு முகவரியில்லாமல் வினியோகிக்கின்றனர். குற்றச்சாட்டு கூறுபவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் பொது மேடையில் விவாதிக்க தயாரா? எனது பொது வாழ்க்கையில் நான் யாருக்கும் எப்போதும் கெடுதல் செய்யவில்லை . என் மீது கூறப்பட்ட குற்றசாட்டை நிருபித்தால், நான் வெற்றி பெற்றால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார்.
மனித நேய மக்கள் கட்சி கடந்த 14 ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளது. 2008 முதல் நடப்பு வரையில் மட்டும் 18 பேர்களுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் ஆம்புலன்ஸ் சர்வீஸ் இலவசமாக செய்துள்ளோம். மாவட்டம் முழுவதும் 10 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவைக்காக நிறுத்தி வைத்துள்ளோம். கண்சிகிச்சை முகாம்கள், பொது மருத்துவ முகாம்கள், சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் போன்ற 20க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தி போலியோ விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியுள்ளோம். ராமநாதபுரம், மண்டபம், பரமக்குடி, போகலூர், கிளியூர், புதுமடம், வேதாளை, பனைக்குளம் போன்ற பகுதிகளில் 564 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.37 லட்சம் கல்வி உதவிகள் வழங்கியுள்ளோம். நோன்பு பெருநாளுக்கு புத்தாடை, உணவு பொருட்கள் என ரூ.7 லட்சம் மதிப்பில் தானம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ராமநாதபுரம், மண்டபம், வேதாளை ஆகிய பகுதிகளில் கல்வி, மருத்துவம், சிறுதொழில் துவங்க நகை ஈடாக பெற்று வட்டியில்லாமல் கடன் வழங்கியுள்ளோம். நான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால், அனைவருக்கும் கல்வி கிடைக்க கல்வி நிதிஉதவி வழங்க முயற்சிப்பேன்.மீனவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் வட்டியில்லா கடன் வழங்கும் வங்கியை துவங்குவேன். கடல் அட்டை மீதான தடையை நீக்க குரல் கொடுப்பேன். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். 6 சட்டசபை தொகுதிகளிலும் தொழிற்சாலை துவங்க நடவடிக்கை எடுப்பேன். தொகுதியில் சாலை வசதிகள், ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கீழக்கரை, சாயல்குடி, தூத்துக்குடி செல்லும் வகையில் ரயில் போக்குவரத்து கொண்டு வர முயற்சி செய்வேன். கடல்சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கடல்சார் பல்கலை., கொண்டு வர முயற்சிப்பேன்.
எங்கள் கட்சி கடந்த 14 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்புமின்றி மக்களுக்காகவே சேவை செய்து வருகிறது. தற்போது முதன்முறையாக அரசியல் ரீதியாக மக்களை சந்திப்பதால், மக்கள் எங்களை முழுமனதோடு ஏற்று கொண்டுள்ளனர்.எங்களுடன் புதிய தமிழகம் கட்சியினரும் சேர்ந்து பணியாற்றுவது எங்களுக்கு வலு. அபிராமம், வீரசோழன், பார்த்திபனூர், பரமக்குடி, எமனேஸ்வரம், பெரியபட்டினம், கமுதி, வேதாளை, மண்டபம், ராமேஸ்வரம், தொண்டி, மணமேல்குடி, மேலபுதுக்குடி, காஞ்சிரங்குடி, நரிப்பையூர், சிக்கல் வாலிநோக்கம் உள்ளிட்ட அனைத்து ஜமாத்துகளிலும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளதுடன், எங்களின் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளனர். மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு சலிமுல்லாகான் கூறினார்
நன்றி: தினமலர்

மத்தியச் சென்னையில் இரு சக்கர வாகனப் பேரணி மூலம் ம.ம.க ஓட்டு சேகரிப்பு





பரம்பரை பரம்பரையாக மக்களின் தேவைகளை புறக்கணித்து அரசியல் அதிகாரத்தை சுவைத்து வரும் சக்திகளின் பதவி ஆசையையும், பணத்திமிரையும், ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து பேரம் பேசிய ஓர் இழி செயலை மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர் அலி தோலுரித்துக் காட்டியுள்ளார்.
07.05.2009 ஆம் தேதி வெளியாகி உள்ள நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வேட்பாளர் ஹைதர்அலியின் நேர்காணல் வெளியாகியிருந்ததது. அதில் மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் ஹைதர் அலி பேட்டியளித்திருந்தார் அதில்,
ஹைதர் அலி எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் இது குறித்து கூறும்போது ''தன்னையும் தனது சகாக்களையும் தயாநிதிமாறனின் ஆட்கள் அணுகி மத்திய சென்னையில் போட்டியிட வேண்டாம் என வற்புறுத்தியதாக தெரிவித்தார். அதோடு பெரும் தொகை தருவதாகவும் வேறு தொகுதியில் போட்டியிடுங்கள் என்றும், அவ்வாறு வேறு தொகுதியில் போட்டியிட்டால் அதற்கான அனைத்துச் செலவுகளையும் அவர்களே (தயாகும்பல்) பார்த்துக் கொள்வதாகவும், கூறியதாகவும்'' ஹைதர் அலி தெரிவித்தார். மத்திய சென்னையில் தயாநிதிமாறனின் வெற்றி வாய்ப்பை மறுத்த ம.ம.க வேட்பாளர் எங்களைப் போல் மக்களோடு அவர்களால் ஒன்றிப் பழக முடியாது. இணைந்த பணியாற்ற முடியாது. கட்சிக்காரர்களோடு கூட நெருங்கிப் பழக முடியாத ஒருவர், சாதாரண மக்களோடு எவ்வாறு நெருங்கி வருவார் என்றும் செ. ஹைதர் அலி வினா விடுத்தார்.
இதற்கு முன்பு தயாநிதிமாறன் பெற்ற வெற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேராதரவினால் கிடைத்த வெற்றியாகும். இந்த மக்களவைத் தேர்தலின் முடிவு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை வழங்கும். மக்கள் உண்மையை உணர்ந்து விட்டார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதின் மூலம் முஸ்லிம் வாக்காளர்களை விட்டு திமுக மேலும் அந்நியப்படுத்தி விட்டது. தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததனால் இதுவரை யாருக்கு ஓட்டுப் போடுவது என முடிவெடுக்காமல் இருந்த வாக்காளர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள். நேர்மையாளர்கள் யார்? என்பதை அது தெளிவு படுத்தும்' என்றார்.
அ.தி.மு.க வேட்பாளர் முஹம்மது அலி ஜின்னாவைப் பற்றி கூறும்போது வாக்காளர்கள் திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். முஸ்லிம் வாக்காளர்கள் தி.மு.கவுக்கு எதிராக வாக்களிப்பார்கள். அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது குறித்து பரிசீலிக்கவே மாட்டார்கள். நாங்கள் மக்களுக்கு மாற்றத்தினை வழங்குவோம்' என்றார்.
ம.ம.க. தொண்டர்கள் நாகரீகமானவர்கள்!
டைம்ஸ் ஆப் இந்தியா புகழாரம்
அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம், மாநாடுகளில் எல்லாம் எவ்வளவு அநாகரீகமாக அதன் தொண்டர்கள் நடந்து கொள்வார்கள் என்பதை பொதுமக்கள் நன்கு அறிவர். மனிதநேய மக்கள் கட்சி தனது தொண்டர்களை கண்ணியமிக்க இளைஞர்களாக உருவாக்கி வைத்திருக்கிறது. கடந்த காலங்களில் தமுமுக நடத்தும் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர், தொண்டர்களின் ஒழுங்கு பற்றிப் பாராட்டிப் பேசியுள்ளனர்.
தற்போது அரசியல் கட்சியாக பரிணாமம் அடைந்த சூழ்நிலையிலும் இதன் தொண்டர் படை நாகரீகம் இழக்கவில்லை. இதனை பொதுமக்கள் கண்டு வருகின்றனர். இந்தியாவின் முதல்தரமான பத்திரிகைகளில் ஒன்றான டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு இதனை சுட்டிக் காட்டியுள்ளது.
மத்திய சென்னை ம.ம.க. வேட்பாளர் செ. ஹைதர் அ அவர்களின் வாக்கு சேகரிப்பு அணிவகுப்பை சுட்டிக்காட்டி எழுதியுள்ள டைம்ஸ் ஆப் இந்தியா (1.5.2009), ''மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்கள் மிகவும் நாகரீகமான முறையில் பேரணியாகச் சென்றனர்'' என்று எழுதியுள்ளது.

முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு? I..N.T.J பொதுக்கூட்டம்




