Friday, May 1, 2009

வரும் சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி, முக்கிய கூட்டணியை உருவாக்கும் என்பதே நோக்கமாகும்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பா.ம.க.,விற்கு ஆதரவு :
மனித நேய மக்கள் கட்சி மாவட்ட கூட்டத்தில் முடிவு
அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி, முக்கிய கூட்டணியை உருவாக்கும் என்பதே நோக்கமாகும்.
நன்றி: தினமலர்

தி.மு.க.,- அ.தி.மு.க., கூட்டணியில் இணைய முடியாத நிலையில், மனித நேய மக்கள் கட்சி, மயிலாடுதுறை, மத்திய சென்னை, ராமநாதபுரம், பொள்ளாச்சி ஆகிய நான்கு தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. தி.மு.க., -அ.தி.மு.க., ஆகிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பறிக்க வேண்டும் என்பதே மனித நேய மக்கள் கட்சியின் விருப்பம்.
இதனால் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடாத தொகுதிகளில் பா.ம.க.,- ம.தி.மு.க.,- கம்யூனிஸ்ட்- விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படலாம் என்று கட்சி நிர்வாகிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். சமீபத்தில், பா.ம.க., ராமதாஸ், மனித நேய மக்கள் கட்சித் தலைவர்களை சந்தித்து, தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரினார். மேலும் சில கட்சித் தலைவர்களும் ஆதரவு கோரினர். இதையடுத்து, தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் சார்பில் போட்டியிடும் கிருஷ்ணசாமிக்கும், மற்ற தொகுதிகளில் பா.ம.க.,- கம்யூனிஸ்ட்- ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கும் ஆதரவாக செயல்பட மனித நேய மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்த மருத்துவர் ராமதாஸ்


இதை உறுதிப்படுத்தும் வகையில் பல்லாவரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீரான் மொய்தீன் தலைமை தாங்கினார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு முழு ஆதரவு தெரிவிப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வேட்பாளர் மூர்த்தி, 'சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த தேர்தலில் கூட்டணி சேர முடியாமல் போய்விட்டது. அடுத்த தேர்தலில் பா.ம.க., அணியில் மனித நேய மக்கள் கட்சி இருக்கும். சிறுபான்மையின மக்களுக்கு எப்போதும் பா.ம.க., ஆதரவாக செயல்படும்,' என்று பேசினார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தை போல மற்ற தொகுதிகளிலும் கூட்டம் நடத்த மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாக, அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.இது குறித்து, த.மு.மு.க.,வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் யாகூப் கூறுகையில், 'இந்த தேர்தலில் தி.மு.க.,விற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து எங்கள் கட்சியினர் பிரசாரம் செய்ய உள்ளனர். எங்களால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் ஓட்டுக்களை தி.மு.க., இழக்கும்,' என்றார்.

தே.மு.தி.க.,வுக்கும் ஆதரவு: மனித நேய மக்கள் கட்சி, தான் போட்டியிடும் நான்கு தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் பா.ம.க., - ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் மோதுகின்றன. இந்த தொகுதியில் மட்டும் தி.மு.க., கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகளுக்கு இக்கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ் - அ.தி.மு.க., மோதும் 17 தொகுதிகளில் தே.மு.தி.க.,விற்கு ஆதரவு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மாற்று கட்சிகளுக்கு ஆதரவளிப்பதால், அடுத்து வரும் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி, முக்கிய கூட்டணியை உருவாக்கும் என்பதே நோக்கமாகும்.

5 comments:

  1. Very good ........

    keep it up like this...........

    insah allah we have 25 sheet of assembly team in tamil nadu.........

    ReplyDelete
  2. Dear MMK,
    dont give support to PMK Ramadas he is not man he is prostitute so pls consider your decision. if u dont support DMK not a matter but when u support to PMK our party also going to bad politics. Ramadas can give support to our 4 seats? dont belive ramadas he is poision...

    ReplyDelete
  3. pls consult with the (T)MMK members also & then take a decision

    ReplyDelete
  4. Dear MMK
    ramadas he is snake.dont beleave.

    ReplyDelete
  5. DR.RAMADASSS IS A 100%TURNCOAT.

    ReplyDelete