Saturday, May 16, 2009

கலவரத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் த.மு.மு.க. வலியுறுத்தல்.

ஐஸ் அவுஸ் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று த.மு.மு.க. வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மனித நேய மக்கள் கட்சியினர் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் தலைமையில் போலீசாரின் மேற்பார்வையிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்தபோது துணை ராணுவ படையினர் எங்கே போனார்கள். இந்த தாக்குதல் ஜனநாயக படுகொலையாகும். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யாமல் காவல் தறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தை வேடிக்கை பார்த்த திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் ரகுபதியை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

தாக்குதலை கண்டித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment