மத்திய சென்னை தொகுதியில் 10 வாக்குசாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை
சென்னை, மே.15 - முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகமது அனிபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள 10 வாக்குசாவடிகளை தி.மு.க.வினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கள்ள ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர். திருவல்லிக்கேணி பகுதியில் வன்முறையை நிகழ்த்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் ரகுபதி உள்ளிட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய சென்னை தொகுதிகளிலுள்ள 10 வாக்குசாவடிகளில் மறுவாக்குபதிவுக்கு உத்தரவிட வேண்டும். மறுவாக்குபதிவு நடக்கும் வரை மத்திய சென்னை தொகுதியின் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment