Tuesday, May 19, 2009

மயிலாடுதுறை தொகுதி விபரங்கள்.

மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் பெற்ற வாக்குகளின் விபரங்கள்

பேரவை தொகுதிகள்: 1. சீர்காழி (தனி), 2. மயிலாடுதுறை, 3. பூம்புகார், 4. திருவிடைமருதூர் (தனி), 5. கும்பகோணம், 6. பாபநாசம்.

மனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை வேட்பாளர் பேராசிரியர் எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பெற்ற வாக்குகள் 19, 816


மொத்த வாக்காளர்கள்: 10,87,027

ஆண்: 5,48,250

பெண்: 5,38,777

2004 தேர்தலில் பெற்ற வாக்குகள்.

மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்): 5,48,250
ஒ.எஸ்.மணியன் (அதிமுக): 2,15,469

மக்களவைத் தேர்தல் 2009 முடிவுகள்:

மொத்த வாக்குகள் -10,90,816

பதிவான வாக்குகள் - 7,99,586

ஓ.எஸ். மணியன் (அதிமுக) - 3,64,089.

மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்) - 3,27,235.

ஜி.கே. பாண்டியன் (தேமுதிக)- 44,754.

எம்.எச். ஜவாஹிருல்லா (மமக)- 19,816.

எஸ். கார்த்திகேயன் (பாஜக)- 7,486.

எல்.வி. சப்தரிஷி (பகுஜன் சமாஜ்)- 5,554.

எம். ராஜாமணி (சுயேச்சை)- 4,684.

எஸ். கணேசன் (வள்ளலார் பேரவை) 4,129.

எம். தட்சிணாமூர்த்தி (சுயேச்சை) 2,700.

கே. நாகராஜன் (சுயேச்சை) 2,599.

பி. ராஜகுமார் (சுயேச்சை) 2,584.

என். குணசேகரன் (சிபிஎம்எல்) 2,262.

தி. திமோத்யூ (சுயேச்சை) 2,051.

வி. ஜெயராமன் (சுயேச்சை) 1,828.

ஏ. கிருஷ்ணப்பா (சுயேச்சை) 1,377.

ஆர். வெங்கட்ரமணி (சுயேச்சை) 1,192.

கே.என். ஜெயக்குமார் (சுயேச்சை) 930.

வி. பாலாஜி (சுயேச்சை) 848.

சுடர் ஆர். காளிமுத்து (சுயேச்சை) 847.

அப்துல் ஜலீல் (சுயேச்சை) 734.

எஸ்.எம். பிரபுதாசன் (சுயேச்சை) 646.

எஸ். அறிவழகன் (சுயேச்சை) 627.

எம்.எச். அகமது மரைக்காயர் (சுயேச்சை) 610.

மத்திய சென்னை மக்களவை தொகுதி விபரங்கள்

சட்டப் பேரவை தொகுதிகள் விபரம். 1. வில்லிவாக்கம், 2. எழும்பூர் (தனி), 3. துறைமுகம், 4. சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி, 5. ஆயிரம் விளக்கு, 6.அண்ணா நகர்.

மொத்த வாக்காளர்கள்: 975217

ஆண்: 489902

பெண்: 485315

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர் அலி அவர்கள் பெற்ற வாக்குகள் 13, 160

2004 தேர்தலில்
தயாநிதி மாறன் ( தி முக): 3,16,329
பாலகங்கா ( தி முக): 1,82,151

2009 மக்களவை தேர்தல் முடிவுகள்
தயாநிதி மாறன் (திமுக) - 2,85,783
முகமது அலி ஜின்னா(அதிமுக)- 2,52,329
ராமகிருஷ்ணன்(தேமுதிக)- 38,959.

இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பெற்ற வாக்குகளின் விபரங்கள்

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி குறித்த விபரங்கள்

மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் வேட்பாளர் எஸ். சலிமுல்லாகான் பெற்ற வாக்குகள் 21,430

15 வது மக்களவை தேர்தல் 2009


இராமநாதபுரம் தொகுதியில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை தொகுதியில் இருந்த அறந்தாங்கியும், விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி என மொத்தம் 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கியதாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி மாறியுள்ளது. கடலாடி சட்டப்பேரவைத் தொகுதி முற்றிலுமாக நீக்கப் பட்டு விட்டது. மறுசீரமைப்பில் புதுக்கோட்டை தொகுதி நீக்கப்பட்டுவிட்டதால் அந்த மாவட்டத்தில் இருந்த அறந்தாங்கி தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

பேரவை தொகுதிகளின் விபரம்:
1)அறந்தாங்கி,
2)திருச்சுழி,
3)பரமக்குடி,
4)திருவாடணை,
5)இராமநாதபுரம்,
6)முதுகுளத்தூர்.

முந்தைய 2004 தேர்தலில் பெற்ற வாக்குகளின் விபரம்:
எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன் (திமுக): - 2,35,287
செ.முருகேசன் (அதிமுக): - 2,25,337

சட்டப்பேரவை தொகுதி வாரியக பெற்ற வாக்குகளின் விபரம்.


அறந்தாங்கி: எஸ். சலிமுல்லாகான், மனிதநேய மக்கள் கட்சி (1,489), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (21,658), ஜே.கே. ரித்தீஷ், திமுக (39,460), எஸ். திருநாவுக்கரசர், பா.ஜ.க. (28,917), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (1,745), சிங்கை. ஜின்னா, தேமுதிக (10,456).

திருச்சுழி: எஸ். சலிமுல்லாகான்,ம.ம.க. (1,634), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (42,452), ஜே.கே. ரித்தீஷ், திமுக (56,467), திருநாவுக்கரசர், பாஜக (7,589), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (2,319), சிங்கை. ஜின்னா, தேமுதிக (10,053).

பரமக்குடி: எஸ். சலிமுல்லாகான்,ம.ம.க. (3,637), வ. சத்தியமுர்த்தி, அதிமுக (43,113), ஜே.கே. ரித்தீஷ், திமுக (45,218), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (18,573), பிரிசில்லா பாண்டியன், பகுஜன்சமாஜ் (11,617), சிங்கை. ஜின்னா, தேமுதிக (4,575).

திருவாடானை: எஸ். சலிமுல்லாகான், ம.ம.க. (4,774), வ. சத்தியமுர்த்தி, அதிமுக (31867), ஜே.கே. ரித்தீஷ், திமுக (53,840), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (25,913), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (4,623), சிங்கை. ஜின்னா, தேமுதிக (6,154).

இராமநாதபுரம்: எஸ். சலிமுல்லாகான், ம.ம.க (6,712), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (38,698), ஜே.கே. ரித்தீஷ், திமுக (47,850), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (28,551), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (3,119), சிங்கை. ஜின்னா, தேமுதிக (9,393).

முதுகுளத்தூர்: எஸ். சலிமுல்லாகான், ம.ம.க.(3,184), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (47,032), ஜே.கே. ரித்தீஷ், திமுக (50,425), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (18,451), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (15,532), சிங்கை. ஜின்னா, தேமுதிக (8,926).

இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் விபரங்கள்:
மொத்த வாக்குகள் - 11,31,741
பதிவான வாக்குகள்- 7,74,266


1. ஜே.கே. ரித்திஷ் (திமுக) -2,94945
2. வ. சத்தியமூர்த்தி (அதிமுக) -2,25,030
3. எஸ்.திருநாவுக்கரசர் (பா.ஜ.க) -1,28,322
4. பிரிசில்லா பாண்டியன் (பகுஜன் சமாஜ்) -39,086
5. எஸ்.சலிமுல்லாகான் (மனித நேய மக்கள் கட்சி) -21,439
6. எஸ்.சிங்கை ஜின்னா (தேமுதிக) -49,571
7. ஆர்.முகம்மது ஆபித் அலி (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா) -1,496

சுயேச்சை வேட்பாளர்கள்
8.கே.காளிமுத்து -1769
9. எஸ்.சண்முகையா பாண்டியன் -1119
10. எஸ்.சுவார்ட்ஸ் துரை -961
11. கே.செல்லத்துரை -1186
12. பாலமுருகன் -1244
13. பி.பாஸ்கரன் -2330
14. ஜி.முருகேந்திரன்-3471
15. எம்.ஐ.ஜஹாங்கீர்-5870

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 1951 முதல் 2009 வரை வெற்றி பெற்றவர்களில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகமாக 6 முறை வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள், அவர்களை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் விவரம் அடைப்புக் குறிக்குள்:

1951-ம் ஆண்டு -நாகப்பசெட்டியார், காங் -1,09,110, (டி.சுந்தரம், கிஷான் மஸ்தூர்-44118),

1957-ல் பி. சுப்பையா அம்பலம், காங் -89,701, (ஆர்.கே. ராமகிருஷ்ணன், சுயே -50668), 1962-ல் எம். அருணாச்சலம், காங் -1,45,396, (சலிவதீஸ்வரன், சுதந்திரா-114513),

1967-ல் எம். ஷெரீப், சுயே -1,80,392 (எஸ். பாலகிருஷ்ணன், காங் -1,48,367),

1971-ல் பி.கே. மூக்கையாத் தேவர், பார்வர்டு பிளாக் -2,08,431, (எஸ். பாலகிருஷ்ணன், ஸ்தா. காங் -1,39,276),

1977-ல் பி. அன்பழகன், அதிமுக -2,97,612, (எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -1,22,482),

1980-ல் எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -2,75,049, (பி. அன்பழகன், அதிமுக -1,90,916),

1984-ல் வி. ராஜேஸ்வரன் -காங் -2,74,922, (எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -1,74,778),

1989-ல் வி. ராஜேஸ்வரன், காங் -3,98,145, (சுப. தங்கவேலன், திமுக -2,18,601),

1991-ல் வி. ராஜேஸ்வரன், காங் -3,48,415, (காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி, 1,76,889),

1996-ல் எஸ்.பி. உடையப்பன், த.மா.கா -3,31,249, (வி. ராஜேஸ்வரன், காங் -1,35,945),

1998-ல் வி. சத்தியமூர்த்தி, அதிமுக -2,58,978, (எஸ்.பி. உடையப்பன், தமாகா -2,34,886),

1999-ல் கே. மலைச்சாமி, அதிமுக -2,65,253, (எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், திமுக -2,58,607),

2004-ல் எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், திமுக- 2,35,287, (செ. முருகேசன், அதிமுக-2,25,337),

2009-ல் கே. சிவக்குமார் என்ற ஜே.கே. ரித்தீஷ், திமுக -2,94,945, (வி. சத்தியமூர்த்தி, அதிமுக -2,25,030).

தற்போது நடைபெற்று முடிந்துள்ள 15-வது மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி. சத்தியமூர்த்தியை விட கூடுதலாக 69,915 வாக்குகள் பெற்று, ஜே.கே. ரித்தீஷ் வெற்றி பெற்றுள்ளார்.

பொள்ளாச்சி மக்களவை தொகுதி விபரம்.

பொள்ளாச்சி மக்களவை தொகுதி விபரங்கள்.

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் சகோ இ. உமர் அவர்கள் பெற்ற வாக்குகள் 13,933 என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


சட்டமன்ற தொகுதி விபரம்: 1. தொண்டாமுத்தூர், 2. கிணத்துக்கடவு, 3. பொள்ளாச்சி, 4. வால்பாறை (தனி), 5. உடுமலைப்பேட்டை, 6. மடத்துக்குளம்.

மொத்த வாக்காளர்கள்: 1014130

ஆண்: 509161
பெண்: 504969

தனித் தொகுதியாக இருந்த பொள்ளாச்சி மக்களவையில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, தாராபுரம் (தனி), பொங்கலூர் ஆகியபேரவைத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. மறுசீரமைப்பில் பொங்கலூர் தொகுதி நீக்கப்பட்டுள்ளது. தாராபுரம் தொகுதி ஈரோடு மக்களவையில் சேர்க்கப்பட்டுள்ளது. தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி), உடுமலை, புதிதாக உருவாக்கப்பட்ட மடத்துக்குளம் ஆகிய பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.


பேரூர் தொகுதியில் கோவை மாநகரையொட்டி இருந்த குறிச்சி, குனியமுத்தூர் நகராட்சிப் பகுதிகள் கிணத்துக்கடவு தொகுதியோடு இணைக்கப்பட்டுள்ளன. பேரூர் தொகுதியில் இருந்த கோவை மாநகராட்சியின் 48 முதல் 56 வார்டுகள், சில பேரூராட்சிப் பகுதிகள் தொண்டாமுத்தூர் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன கோவை மாநகரின் மையப் பகுதியில் வசித்தாலும், பொள்ளாச்சி மக்களவையில் இருக்கும்படி தொகுதி எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. நான்கு திசைகளிலும் பரப்பளவில் மிகப் பெரிய தொகுதியாகப் பரந்து விரிந்து காணப்படுகிறது.

பொள்ளாச்சித் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 10 லட்சத்து 13 ஆயிரத்து 708. ஆண்கள் 5 லட்சத்து 8 ஆயிரத்து 871. பெண்கள் 5 லட்சத்து 4 ஆயிரத்து 837. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் மற்றும் தலித்துகள் தலா 40 சதவீதத்தினர் உள்ளனர். சிறுபான்மை சமூகத்தினர், நாயுடு, செட்டியார் உள்ளிட்ட பிற ஜாதியினர் அனைவரும் சேர்ந்து 20 சதவீதத்தினர் உள்ளனர்.

Sunday, May 17, 2009

தோல்வியே வெற்றியின் முதல் படி!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தோல்வியே வெற்றியின் முதல் படி!



நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள் நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (அல்-குர்ஆன்)

நமது தாய்க்கழகமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், நம் முஸ்லிம் சமுதாயத்திற்காக பற்பல இன்னைகளையும், கரடுமுரடான பாதைகள் பலவற்றையும் கடந்து வந்து, கடந்த 14 ஆண்டுகளாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஒவ்வொரு துறையிலும் வெற்றி நடை போடுவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.

கல்வி விழிப்புணர்வு, பொதுநலசேவைகள், குருதிக்கொடைகள், உரிமைமீட்புப் போராட்டக்களங்கள் என்று நம் சமுதாய முன்னேற்றத்திற்காக நமது கழகம் ஆற்றிய அளப்பறிய தியாகங்களை தற்போது நினைவு கூறுமளவிற்கு எவரும் எளிதில் மறந்து விடக்கூடிய விஷயமன்று. தனது வெற்றிப்பயணங்களின் மற்றொரு மைல்கல்லான முஸ்லிம்களின் தன்னிகரற்ற சக்தியை அரசியல் களத்தில் நிலைநாட்டுவதற்காக, நமது சமுதாயத்தின் நீண்ட நாளைய உள்ளக்குமுறலை அரசியல் களத்திலும் மனிதநேய மக்கள் கட்சியாக பிரதிபளித்தது.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பொருளாதார சிக்கலுக்கிடையில், தமிழக அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில், முஸ்லிம்களின் கடந்த காலங்களைப் போல் திராவிடக்கட்சிகளிடம் ஒருசீட்டுக்காக மண்டியிட்டு மடிபிச்சைக் கேட்கும் அளவிற்கு இழிநிலையில் இல்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் அல்லாஹ்வின் துணையோடு, நம் சமுதாய அடலேறுகளின் அயராது உழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு தனி அரசியில் களம் கண்டோம் - அல்ஹம்துலில்லாஹ்.

காரணம் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு இன்னல் என்றால் அது என் பிணத்தின் மீதுதான் நிகலும் என்ற புளித்துப்போன வீரவசனங்களை இச்சமுதாயம் இனியும் கேட்கத் தயாரில்லை என்பதை உணர்த்துவதற்காகவும்,

சட்டம் இயற்றும் அவைகளில் இடமில்லை என்றாலும் என் சவலைப்பிள்ளைகளுக்கு என் நெஞ்சத்தில் என்றும் இடமுண்டு என்ற பழைய பஞ்சாங்க பசப்பு வார்த்தைகளால் இனி முஸ்லிம்களை கோமாளிகளாக ஆக்கிட முடியாது என்பது நிரூபிப்பதற்காகவும்,

நமது சமுதாயத்தின் தன்மானம் காப்பதற்காக, திமுக, அதிமுக என்ற பணம் மற்றும் படை பலங்கள் பல கொண்ட கூட்டணிகளை எதிர்த்து 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் நாம் கால் பதித்தோம்.


ஜனநாயத்தை பணநாயகம் ஆட்சி புரியும் நம் தாய்த்திருநாட்டில், 2 மாதங்களில் ஒரு அரசியில் கட்சியை துவங்கி 3வது மாதத்தில் நாடளுமன்றம் செல்வது என்பது எட்டாக்கனி என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில், அராஜகமும் அடக்குமுறைகளும் அரங்கேறிய 2009 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் போட்டியிட்ட நான்கில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லையே என்ற எண்ணம் நம் சகோதரர்கள் பலருக்கு சோர்வை அளித்திருக்கலாம். அத்தகைய நல்ல உள்ளங்களுக்கு வல்ல அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்.

அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே முழுமையாக அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:112)

நிச்சயமாக எவர்கள் ''எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்-குர்ஆன் 46:13)

அன்புச் சகோதரா! ''மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும''; என்ற தாரக மந்திரத்தை இலட்சியமாக உணர்த்தும் மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் நாம். நமது இலட்சியம், நமது கொள்கை, நமது இறுதி இலக்கு அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெற்று ஜன்னத்துல் பிர்தௌவ்ஸ் என்ற உயரிய சுவர்க்கத்தை அடைவதுதானே தவிர வேறில்லை. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் கால் பதிப்பதென்பது மக்களுக்கு சேவை செய்யவும், பின்தங்கியுள்ள நம் முஸ்லிம் சமுதாயத்ததை முன்னேற்றப்பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கான ஒரு முயற்சியே அல்லாமல் வேறில்லை.

அன்புச் சகோதரா! என்று நாம் மனிதநேய மக்கள் கட்சி என்ற தனி அரசியல் களம் கண்டோமோ அன்றே தமிழக முஸ்லிம்கள் திராவிடக்கட்சிகளுக்கு அடிமைகளல்ல என்று நிரூபித்ததில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

பணபலத்திற்கும், படைபலத்திற்கு இந்த சமுதாயம் அடங்கிவிடாது, மாறாக ஃபினிக்ஸ் பறவையை போல மரணத்திலிருந்து எதிர்நீச்சல் போடும் ஆற்றல் நமக்குண்டு என்பதை தமிழக அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்தலில் வெற்றி கண்டிருக்கிறோம்.

பதவி வெறிகொண்ட இத்திராவிடக் கட்சிகள் நம்பிரச்சாரத்தைக் கண்டு தோல்வி பயத்தால் நம்மை பேரம் பேசுமளவிற்கு, நம் சகோதரர்கள் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்துமளவிற்கு நம்மை கண்டு அஞ்சியதில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

நாம் ஒரு கூட்டணியின் வெற்றிக்காக களம் இறங்கினால் 100 சதவிகித வெற்றிக்காக அவர்களக்காக உழைக்கவும் தெரியும், அதே நேரத்தில் அவர்கள் நம்மை கிள்ளுக் கீரையாக நினைத்தால் அவர்களையே எதிர்த்து களம் காணவும் முடியும் என்பதை உணர்த்தியதில் நாம் வெற்றி கண்டிருக்கிறோம்.

இதையெல்லாம் விட மேலாக, நம் சமுதாயம் மேலோங்க வேண்டும் என்ற உன்னத குறிக்கோளுக்காக மட்டுமே, தூய எண்ணத்தோடு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பாடுபட்டதற்கு, அயறாது உழைத்ததற்கு நாளை மறுமையிலே வல்ல அல்லாஹ்விடம் நற்கூலி பெறவிருப்பதை எண்ணித்தான் மிகவும் அகமகிழ்கிறோம்.

அன்புச் சகோதரா! இவ்வுலகில் வெற்றி தோல்லி என்பதெல்லாம் இறைவிசுவாசங்கொண்ட முஸ்லிம்களாகிய நமக்கு ஒரு பொருட்டல்ல. நாம் ஒரு விஷயத்தில் தோல்வியடைந்தால் நாம் தவறான நிலையில் இருக்கிறோம் என்பது பொருளல்ல. இதுதான் இஸ்லாம் நமக்குணர்த்தும் உன்னதமான பாடம்.

அல்லாஹ்வின் முழுபாதுகாப்பிலும், வஹியின் தொடர்பிலும் இருந்த அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உஹத் போர்க்களத்தில் தோல்வியடைந்தார்கள், அவர்கள் பற்கள் உடைக்கப்பட்டு அவர்களின் திருமுகம் கோரையாக்கப்பட்டது. இன்னும், இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்காக 13 ஆண்டுகள் மக்காவில் உழைத்த அண்ணலார் அவர்கள், இஸ்லாமிய அரசையோ, முஸ்லிம்களை பாதுக்ககாக்கும் கட்டமைப்பையோ உருவாக்க முடியவில்லை, இறுதியில் மக்காவை விட்டே அடித்து விரட்டப்பட்டார்கள்.

வெளிப்படையாக தோல்விபோன்று காட்சியளித்த அந்த சம்பவங்களை வைத்துக் கொண்டு இஸ்லாம் தவறான சிந்தாந்தம், முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை நிலை நாட்டுவதில் தோல்வியடைந்தார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா?(நவ்வூதுபில்லாஹ்). அவைகளெல்லாம் தோல்விகளல்ல. மாறாக பின்னர் வரவிருந்த பல வெற்றிகளை சுவைக்கும் அளவிற்கு முஸ்லிம்களை புடம் போட்ட தங்கங்களாக மாற்றிய அல்லாஹ்வின் சோதனைகள் அல்லவா அவைகள். இவ்வாறே முஸ்லிம்களாக நாம் பலவகையிலும் சோதிக்கப்படுவோம் என்று வல்ல இறைவன் தன் திருமறையில் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறான்.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நன்மாராயங் கூறுவீராக!. பொறுமை உடையோராகிய அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 2: 155-157)

முஃமின்களே! உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறைவனிடம் பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (அல்-குர்ஆன் 3: 186)


மக்களே! தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்பார்கள், நாம் மேற்குறிப்பிட்டது போன்று நாம் அடைந்திருக்கும் பல வெற்றிகளை வருகின்ற சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு படிக்கற்களாக மாற்றுவோம் - இன்ஷா அல்லாஹ். நம் சக முஸ்லிம் சகோதரர்களின் நிந்தனைகளை அலட்சியம் செய்வோம். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம் சமுதாயமாக இருக்கட்டும். இனி தமிழக அரசியல் அரங்கின் நம் அடுத்த இலக்கு சட்டம் இயற்றும் அவையான தமிழ சட்டமன்றத்தை வெற்றி கொல்வதே. அதற்காக இன்றே உனது பணிகள் தொடரட்டும், வாழ்த்துகிறது மனிதநேய மக்கள் கட்சி.


முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல்-குர்ஆன் 3 : 200)

Saturday, May 16, 2009

கலவரத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் த.மு.மு.க. வலியுறுத்தல்.

ஐஸ் அவுஸ் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று த.மு.மு.க. வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மனித நேய மக்கள் கட்சியினர் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் தலைமையில் போலீசாரின் மேற்பார்வையிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்தபோது துணை ராணுவ படையினர் எங்கே போனார்கள். இந்த தாக்குதல் ஜனநாயக படுகொலையாகும். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யாமல் காவல் தறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தை வேடிக்கை பார்த்த திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் ரகுபதியை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

தாக்குதலை கண்டித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திமுகவினரின் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து கோவையில் நடைபெற்ற ஆர்பாட்டம்.

மத்திய சென்னை தொகுதியில் கள்ள ஓட்டுப் போடவந்த திமுகவினரை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் மீது காவல் துறை முன்னிலையில் கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினரின் அராஜகப் போக்கைக் கண்டித்து கோவையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.













Friday, May 15, 2009

கலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடைபெறுமா?

சென்னை ஐஸ் அவுஸ் வாக்கு சாவடியில் மோதல் சம்பவம் முறைகேடு நடந்துள்ளதா என்று தேர்தல் அதிகாரிகள் விசாரணை.
கலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடைபெறுமா?


சென்னை, மே.15 சென்னை ஐஸ் அவுஸ் வாக்குச்சாவடியில் நடைபெற்ற மோதல் சம்பவத்தின் போது முறைகேடு நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

வன்முறை-கலவரம்
மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் தயாநிதிமாறன், அ.தி.மு.க. சார்பில் முகமதுஅலி ஜின்னா, மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஹைதர் அலி ஆகியோர் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்கள். மத்திய சென்னை தொகுதியில் நேற்று முன்தினம் விறுவிறுப்பாக ஓட்டுபதிவு நடைபெற்றது. அப்போது ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள என்.கே.டி. பெண்கள் மேல் நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடவந்த திமுகவினரை தடுத்த மனித நேய மக்கள் கட்சியினர் மீது திமுகவினர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில் கலவரம் நடைபெற்ற வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சென்னை லயோலா கல்லூரியில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரி விசாரணை
இந்த மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை நேற்று மத்திய சென்னை தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலா, மத்திய தேர்தல் பார்வையாளர் மற்றும் அரசியல் கட்சி தேர்தல் ஏஜெண்டுகள் பார்வையிட்டனர். இந்த வாக்கு சாவடியில் தேர்தல் நடைபெற்றபோது முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்ததும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலா வன்முறை நடைபெற்ற வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்பு இது சம்பந்தமாக அறிக்கையை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவுக்கு அனுப்பிவைத்தார். இந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தலாமா? என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறார்கள்.

வன்முறை நடைபெற்ற 10 வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை.

மத்திய சென்னை தொகுதியில் 10 வாக்குசாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை


சென்னை, மே.15 - முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முகமது அனிபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள 10 வாக்குசாவடிகளை தி.மு.க.வினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கள்ள ஓட்டுக்களை பதிவு செய்துள்ளனர். திருவல்லிக்கேணி பகுதியில் வன்முறையை நிகழ்த்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் ரகுபதி உள்ளிட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய சென்னை தொகுதிகளிலுள்ள 10 வாக்குசாவடிகளில் மறுவாக்குபதிவுக்கு உத்தரவிட வேண்டும்.
மறுவாக்குபதிவு நடக்கும் வரை மத்திய சென்னை தொகுதியின் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

திமுகவின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து INTJ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

இந்திய தவ்ஹீத் ஜமாத் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

மத்திய சென்னை தொகுதியில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தனது அரசு அதிகாரத்தையும் பணபலத்தை பயன்படுத்தி ஜனநாய ரீதியில் தேர்தலை சந்திக்க திறனியற்ற திமுக தனது குண்டர் படையின் மூலமும் முஸ்லிம் சமுதாயத்தை காட்டிக்கொடுக்க துணிந்துவிட்ட த.த.ஜ அமைப்பின் இனதுரோகிகளின் உதவியுடனும் கள்ள ஓட்டுபோட வந்த ஜனநாய துரோகிகளை தட்டிக் கேட்ட மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்களை கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினரை கண்டித்தும், அதை வேடிக்கை பார்த்த காவல்துறையை கண்டித்தும் வன்முறை நடைபெற்ற பகுதியில் மறுவாக்கு பதிவு நடத்தக் கோரியும் இந்திய தவ்ஹீத் ஜமாத் அறிக்கை வெளியிட்டுள்ளது.



திமுகவினர் அத்துமீறல் பாப்புலர் ஃபிரண்ட் கடும் கண்டனம்.

மத்திய சென்னை ஐஸ் ஹவுசில் வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுப் போடவந்த திமுகவினரை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடதத்திய திமுக வின் அத்துமீறலை கண்டித்து பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் மாநிலச் செயலாளர் சகோதரர் அ.ஃபக்குருதீன் வெளியிடும் கண்டன அறிக்கை.

Thursday, May 14, 2009

சென்னை ஐஸ் அவுஸ் பகுதி போர்க்களமானது

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியே போர்க்களமானது

தி.மு.க-மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் கடும் மோதல் 8 பேர் காயம்; கார்கள், வீடு அடித்து நொறுக்கப்பட்டன
சென்னை, மே.14 சென்னை ஐஸ் அவுஸ்சில் தி.மு.க- மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில், 8 பேர் காயமடைந்தனர். தி.மு.க. பகுதி செயலாளரின் வீடும், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளின் 2 கார்களும் தாக்குதலில் சேதம் அடைந்தது.

போலீஸ் கமிஷனரிடம் மனு
மத்திய சென்னை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி நேற்று காலை 10.30 மணியளவில் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் திருவல்லிக்கேணி பகுதியில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கள்ள ஓட்டு போடுவார்கள் என்ற அச்சம் உள்ளதாகவும், எனவே 97-வது வார்டில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.


இந்த நிலையில், 12 மணிக்கு ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள வாக்குசாவடிகளில் கும்பல் ஒன்று கள்ளஓட்டு போட முயற்சி செய்வதாக கூறி, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் 2 கார்களில் அங்கு வந்தனர். அப்போது அங்குள்ள என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஏராளமான தி.மு.க.வினர் கூட்டமாக கூடியிருந்தனர். அப்போது தி.மு.க.வினருக்கும், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

போர்க்களமானது
காரில் வந்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை ஒரு கும்பல் சுற்றி வளைத்து கடப்பாறையால் காரை தாக்கினார்கள். இதில், அசன் அலி என்பவருக்கு கார் கண்ணாடி குத்தியது. மேலும், காரில் இருந்தவர்களுக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், காருக்குள் இருந்த 7 பேரும் உருட்டுக் கட்டைகளால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

உருட்டுக் கட்டை தாக்குதலில் காயம் அடைந்த சிலர் ரத்தம் சொட்ட சொட்ட காரில் இருந்து இறங்கி ஓடினார்கள். அப்போது சரமாரியாக கற்களும் வீசப்பட்டன. உருட்டுக் கட்டைகளையும் சுழற்றி அடித்தார்கள். சுமார் 30 நிமிடங்கள் அந்த சாலையே போர்க்களம் போல காட்சியளித்தது. மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் வந்த 2 கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

கலவரக்காரர்கள் ஓட்டம்
இந்த மோதல் சம்பவம் பற்றி சென்னை நகர் முழுவதும் காட்டுத்தீ போல தகவல் பரவியது. உடனடியாக ஐஸ் அவுஸ் பகுதிக்கு போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர், இணை கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் மவுரியா ஆகியோர் நூற்றுக்கு மேற்பட்ட போலீசாரோடும், அதிரடிப்படை போலீசாரோடும் ஐஸ்அவுஸ் பகுதிக்கு விரைந்தனர். போலீஸ் படையினர் விரைந்து வருவதை பார்த்து கலவரக்காரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, மனிதநேயமக்கள் கட்சியினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தகராறு நடந்ததாக தகவல் கிடைத்தது. உடனே துணை கமிஷனர் மனோகரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து அவர்களை விரட்டியடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில், மனித நேய மக்கள் கட்சியினர் ஏராளமானோர் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகையிடுவது போல திரண்டனர். ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுசெயலாளர் அப்துல்சமதுவை அழைத்து போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். சட்டப்படி, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் உறுதிமொழி அளித்தார்.

4 பிரிவின் கீழ் வழக்கு
மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியிடமும் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். அதன்பிறகு, மனிதநேய மக்கள் காட்சி சார்பில் ஐஸ்அவுஸ் போலீசில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
அந்த புகார் மீது ஐஸ்அவுஸ் போலீசார் இ.பி.கோ 324, 147, 148, 502/2 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

வீடு மீது கல்வீச்சு
இதற்கிடையே தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் வீடு மீது பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தினார்கள். வீட்டின் இரும்புக் கேட்டை வளைத்து, பயங்கர தாக்குதல் நடந்தது. வீட்டின் முன்பக்க அறையில் இருந்த ஒரு ஸ்கூட்டர், டி.வி. கம்ப்யூட்டர் மற்றும் மேஜை, நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவரின் வீடு அருகே இருந்த தி.மு.க.வின் தேர்தல் அலுவலகமும் தாக்கப்பட்டது. உடனடியாக அந்த அலுவலகத்தை மூடிவிட்டார்கள்.

போலீசார் அடித்து விரட்டினர்
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் முகாமிட்டிருந்த கமிஷனர் ராதாகிருஷ்ணன் 100 போலீசாருடன் டாக்டர் பெசன்ட் ரோட்டில் அணிவகுத்து வந்தார். அந்த ரோட்டில் அனைத்து தெருக்களிலும் புகுந்து கூட்டமாக கூடி நின்றவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். அப்போது திருவல்லிக்கேணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதர்சயீத் அங்கு வந்தார்.
போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் அவர் கடுமையான வாக்குவாதம் செய்தார். தி.மு.க.வினர் திருவல்லிக்கேணி பகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று புகார் கூறினார். அதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் உறுதியளித்தார். பிற்பகல் 3 மணிக்கு மேல்தான் ஐஸ்அவுஸ் பகுதியில் அமைதி நிலை திரும்பியது. இந்த மோதல் சம்பவம் காரணமாக அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் ஹைதர் அலி நிருபர்களிடம் கூறியதாவது:

மறுவாக்குபதிவு
தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ்தான் இந்த சம்பவத்திற்கு காரணம். அவர் தலைமையில் 100&க்கும் மேற்பட்ட ரவுடிகள் மனிதநேய மக்கள் கட்சியினரை தாக்கியுள்ளனர். தாக்குதலில் அசன் அலி, ஜாகீர் உசேன், காஜாபாய், ஹைதர் அலி, கலாவுதீன், பாரூக், நூர்ஜான் ஆகிய 7 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். 2 கார்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நேர்மையாக நடக்கவில்லை. கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளன. எனவே இந்த 10 வாக்குசாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். இவ்வாறு ஹைதர் அலி கூறினார்.

தொடர்ந்து பதற்றம்
ஹைதர் அலி போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்திற்கும் சென்று மனு கொடுத்தார். காயம் அடைந்த மனிதநேய மக்கள் கட்சியினர் முதலில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். 2 பேருக்கு கண்ணில் அடிபட்டிருந்ததால் எழும்பூர் கண் ஆஸ்பத்திரியிலும் மற்றவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர்.
தி.மு.க. தரப்பில் காயம் அடைந்த சாரங்கபாணி என்பவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலை நிலவுவதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு
ஐஸ்அவுஸ் மோதல் சம்பவம் தொடர்பாக, தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் உள்பட 20 பேர் மீது ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோதலை தூண்டியதாக மத்திய சென்னை தி.மு.க.வேட்பாளரும் முன்னாள் மத்திய மந்திரியுமான தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியினர் போலீசாரிடம் வலியுறுத்தினார்கள். ஆனால் சம்பவம் நடந்த இடத்திற்கு அவர் வரவில்லை என்பதால் தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர்.

நேற்று மாலையில் இது தொடர்பான முதல் தகவல் அறிக்கை நகலை வாங்கிய பின்னரே, மனிதநேய மக்கள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நன்றி: தினத்தந்தி

ம.ம.க வினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய 5 குண்டர்கள் கைது

சென்னை: மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ் ஹவுஸில் நேற்று மனித நேய மக்கள் கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக அயோத்தியா குப்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். திமுக பகுதி செயலாளரையும் தேடி வருகின்றனர்.

நேற்று நடந்த வாக்குப் பதிவின்போது ஐஸ் ஹவுஸ் பகுதியில், திமுகவினர் திடீர் வன்முறையில் இறங்கினர்.

என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கள்ள ஓட்டுக்கள் போடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் வந்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த தி.மு.க.வினருக்கும் மனித நேய மக்கள் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

மனித நேய மக்கள் கட்சியினரை அவர்கள் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் வெறித்தனமாக தாக்கினர். ஓட ஓட விரட்டித் தாக்கினர்.

இதில் அசன்அலி உள்பட 8 பேர் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த மோதலால் ஐஸ் ஹவுஸ் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. கடைகள் மூடப்பட்டன. போர்க்களம் போல அப்பகுதி காணப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ரவுடிகளுக்குப் பெயர் போன அயோத்தியாகுப்பத்தைச் சேர்ந்த முத்துக்குமார், வடிவேல், மூர்த்தி, தனசேகர், சசிகுமார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதலை நடத்தச் சொல்லி தூண்டி விட்டதாக வேட்பாளர் ஹைதர் அலியால் குற்றம் சாட்டப்பட்டுள்ள தி.மு.க. பகுதி செயலாளர் காமராஜ் உள்பட மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஜெ, ராமதாஸ் கண்டனம்:

திமுகவினரால் மமகவினர் தாக்கப்பட்டதற்கு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,.

நேற்று காலை மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு தங்கள் வாக்குகளை செலுத்திக் கொண்டிருந்தனர். திடீரென்று திமுக ரவுடி கும்பல் அந்த வாக்குச் சாவடிக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட முனைந்துள்ளது.

இதைத் தட்டிக் கேட்ட இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை பயங்கரமான ஆயுதங்களை கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதன் காரணமாக பலருக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது.

கழக தொண்டர்கள் மீதும், இஸ்லாமிய சமுதாயத்தினர் மீதும் திமுகவினர் நடத்தியுள்ள கொலை வெறித் தாக்குதல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐஸ்ஹவுஸ் பகுதியில், வாக்காளர்களை விரட்டிவிட்டு கள்ள ஓட்டுப்போட்டுக்கொண்டிருந்த கும்பலை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலியும், அவரது கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் காவல் துறையினரிடம் அடையாளம் காட்டி அப்புறப்படுத்த முயற்சித்தபோது, கள்ள ஓட்டுப்போட முயற்சித்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஹைதர் அலியையும், அவரது கட்சியினரையும் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.

இதில் 6 தொண்டர்கள் அரிவாளால் வெட்டப்பட்டு இருக்கிறார்கள். இந்த வன்முறை தாக்குதலையும், இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையினரின் போக்கையும் வன்மையாக கண்டிக்கிறேன் என அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
நன்றி:Thats Tamil

காயமடைந்த ம.ம.க தொண்டர்கள் சிகிச்கைக்காக அப்போலோவில் அனுமதி

காயமடைந்த ம.ம.க தொண்டர்கள் சிகிச்கைக்காக அப்போலோவில் அனுமதி
இன்று (13-05-09) நடைபெற்ற வாக்குப்பதிவின் போது திமுக குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலில் காயமடைந்தோர்களை சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

சிகிச்சை பெறுபவர்களை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ம.ம.க பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் உடல்நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.

சிகிச்சை பெறுபவர்களை ம.ம.க பொருளாளர் ஹாருன் ரசீத் உடன் இருந்து கவனித்து வருகிறார்.

சிகிச்சை பெற்று வருபவர்களை ஐ.என்.டி.ஜெ தலைவர் பாக்கர், அதிமுக திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் பதர் சையது, முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் முகம்மது ஹனிபா ஆகியோர் உடல்நலம் விசாரித்தனர்.

கொலை வெறி தாக்குதல் நடத்திய திமுக குண்டர்கள்.

மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி இன்று காலையில் ஓட்டு போட்டு விட்டு மத்திய சென்னை பகுதியில் உள்ள “பூத்”களை நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்போது ஐஸ் அவுஸ் பகுதியில் ஒரு கும்பல் வாக்குச்சாவடியை கைப்பற்றி கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது.




உடனே கட்சியின் பொதுச் செயலாளர் ஹைதர் அலியின் காரில் நிர்வாகிகள் விரைந்து சென்றனர். காரை அசன் அலி ஓட்டினார். ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையம் அருகே கார் சென்ற போது ஒரு கும்பல் சுற்றி வளைத்து கடப்பாறையால் காரை உடைத்தனர். இதில் அசன் அலிக்கு கார் கண்ணாடி குத்தியது. காரில் இருந்த வர்களுக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் மீரான் மொய்தீன், அசன் அலி, சாகிப்பாஷா, பாரூக், வாசிம், ஜலாலுதீன் ஆகிய 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அங்கு பதட்ட நிலை உருவானது.


காயம் அடைந்தவர்களை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களை வேட்பாளர் ஹைதர்அலி சென்று பார்த்து ஆறுதல் கூறினார். 6 பேர் வெட்டு பட்டதால் மனித நேய மக்கள் கட்சியினர் ஆவேசம் அடைந்து ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மோதல் குறித்து மனித நேய மக்கள் கட்சி சென்னை மாவட்ட செயலாளர் அப்துல் கூறியதாவது:- ஐஸ் அவுஸ் பகுதியில் காமராஜ் என்பவர் தலைமையில் தி.மு.க.வினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அங்கிருந்த சிலர் எங்களை முற்று கையிட்டனர். எனவே பிரச்சினை வேண்டாம் என்று காரில் திரும்ப முயற்சி செய்தோம். அப்போது ஒரு கும்பல் எங்களை துரத்தி வந்து, காரை உடைத்து சரமாரியாக வெட்டினார்கள். இதில் 6 பேர் காயம் அடைந்தனர். உடனே ரத்தம் சொட்டச் சொட்ட போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தோம். இதனால் போலீஸ் நிலையம் முழுவதும் ரத்தம் படிந்து கிடந்தது. ஆனாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று இரவே இந்த பகுதியில் 400-க்கும் மேற்பட்டவர்கள் லாட்ஜில் தங்கி இருந்தனர்.இதுபற்றி போலீசில் புகார் செய்தோம். உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்தால் பிரச்சினை வந்து இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி: மா‍லைமலர்

Wednesday, May 13, 2009

மத்திய சென்னை வன்முறை: நெல்லையில் த.மு.மு.கவினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி : நெல்லையில் த.மு.மு.க.,நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,,கொடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.


மத்திய சென்னையில் த.மு.மு.க.,வின் அரசியல் கட்சியான ம.ம.க.,சார்பில் ஹைதர்அலி போட்டியிட்டார். தேர்தலின் போது அங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் த.மு.மு.க.,வினரை ஓட்டுபோடவிடாமல் தி.மு.க.,வினர் தடுத்ததாக தகவல்கள் வெளியாயின. இதனை கண்டித்து இன்று நெல்லையில் த.மு.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க.,மாவட்ட தலைவர் ரபீக், மாவட்ட செயலாளர் உஸ்மான்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் தி.மு.க.,வையும் கருணாநிதியையும் விமர்சித்தனர். அப்போது தி.மு.க.,கொடிகளையும் தீயிட்டு கொளுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

காவல்துறை முன்னிலையில் ம.ம.க வினர் மீது கொலை வெறித் தாக்குதல்

காவல்துறை முன்னிலையில் மனிதநேய மக்கள் கட்சி பிரமுகர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்!

பத்திரிகை அறிக்கை
நாள்: 13.05.2009

தலைமைத் தேர்தல் ஆணையரிடம் ம.மக. நேரில் புகார், மறு வாக்குப் பதிவு நடத்தவும் கோரிக்கை.










மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் திருவல்லிக்கேணியில் திமுக பகுதி செயலாளரும் மற்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான காமராஜ், திமுகச் சேர்ந்த சேரன் ஆகியோர் தலைமையில் திமுக குண்டர்கள் 200க்கு மேற்பட்டோர் திருவல்லிக்கேணி என்.கே.டி. பள்ளி வாக்குச்சாவடி எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட்ட பத்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக தகவல் வந்ததையடுத்து ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் அங்கு சென்றுள்ளார். அப்போது திமுக குண்டர்கள் வீச்சரிவாள், கத்தி, கடப்பாரை, உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மனிதநேய மக்கள் கட்சியின் பிரமுகர்கள் பயணம் செய்த கார்களை (Safari Car (Ash Colour) No.PY01 AA 1977 & Bolero Car (White Colour) No. TN 21 AX 9001) துவம்சம் செய்துவிட்டு, கார்களில் இருந்த திரு. ஜாகிர் உசேன், ஹசன், மீரான் மொய்தீன், காஜா, பாரூக், சலாவுதீன், ஹைதர் அலி, வசீம், ஜாகிர் உசேன் மற்றும் மூஸா உள்ளிட்ட நபர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை வெறித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது எமது கட்சி வேட்பாளரைக் கண்டவுடன் அவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் மேற்கண்ட ஆயுதங்களுடன் அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள். உடனே கட்சிப் பிரமுகர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற ஹைதர் அலி அவர்கள், மத்திய சென்னை தேர்தல் அதிகாரியிடம் மேற்கண்ட அசம்பாவிதங்கள் குறித்து எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளார். மேலும் காவல்துறையிடமும் அவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால் ஆளுங்கட்சியினர் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனிடையே கலவரச் சூழலை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட திமுக குண்டர்கள், மேற்கண்ட 10 வாக்குச் சாவடிகளிலும் எண்ணற்ற கள்ள ஓட்டுக்களை போட்டுள்ளனர். மேலும் கொடிய ஆயுதங்களுடன் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி பொதுமக்களை உள்ளே விடாமல் தடுத்து தொடர்ச்சியாக கள்ள ஓட்டுக்களைப் போட்டுள்ளார்கள். இதனால் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குள் செல்ல பயந்து தங்களுடைய வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த முடியவில்லை.

இந்த அசம்பாவிதம் நடந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த ஐஸ்'ஹவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட காவல்துறையினர் மனிதநேய மக்கள் கட்சியினருக்கு எதிரான வன்முறையை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தேர்தல் அதிகாரிகளும் அலுவலர்களும் திமுகவினருக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்.

இச்சூழ்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் வன்முறைகள் நடந்தேறிய வாக்குச் சாவடிகள் எண் 97, 98, 99, 100, 102, 104, 110 உட்பட பத்து வாக்குச் சாவடிகளில் மத்திய காவல் படை உதவியுடன் மறு தேர்தல் நடத்துமாறும், அதுவரை மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்குமாறும், மேலும் திமுக குண்டர்களுக்கு ஆதரவாகவும், மனிதநேய மக்கள் கட்சிக்கு எதிராகவும் செயல்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட திமுக குண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறும் மாநில தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி அவர்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.


(மு. ஜைனுல் ஆபிதீன்)
செய்தித் தொடர்பாளர், ம.ம.க.
செல்: 99942 92932

கள்ள ஓட்டு போட வந்தவர்களை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் மீது அருவாள் வெட்டு

மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் மீது அருவாள் வெட்டு மத்திய சென்னை வேட்பாளர் செ.ஹைதர் அலியின் வாகனம் அடித்து நொறுக்ப்பட்டது.

மத்திய சென்னை தொகுதியில் கள்ள ஓட்டு போட வந்தவர்களை தடுத்த மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது அருவாள் வெட்டு.

கள்ள ஓட்டுப்போட வந்த திமுகவைச் சேர்ந்த குண்டகைளை தடுக்கப் போன மனிதநேய மக்கள் கட்சியினர் மீது 500க்கும் மேற்பட்ட திமுக குண்டர்கள் அருவாள் மற்றும் கத்திகளுடன் கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 06க்கும் மேற்பட்ட த.மு.மு.க தொண்டர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் சிலருக்கு கையில் வெட்டு சிலருக்கு முகத்தில் வெட்டு அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

கலவரம் கேள்விப்பட்டு கமிஷ்னர் நிகழ்விடம் வந்து பார்வையிட்டுள்ளார்.

வெட்டுப்பட்டவர்களின் விபரம். ஜாகிர், மீராமைதீன், வசீம், சலாவுதீன், இபுறாகீம், மற்றும் சுதீர் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்ஷா அல்லாஹ் செய்திகள் தொடர்ந்து வரும்.....

Tuesday, May 12, 2009

எந்தவித எதிர்பார்ப்புமின்றி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை : ம .நே. ம. க., வேட்பாளர் சலிமுல்லாகான் பேட்டி

எந்த எதிர்பார்ப்புமின்றி மனிதநேய மக்கள் கட்சி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருவதாக அதன் ராமநாதபுரம்வேட்பாளர் சலிமுல்லாகான் தெரிவித்தார்.ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் எங்கள் கட்சியினரை அன்புடன் வரவேற்று, தங்களது ஓட்டு மனித நேய மக்கள் கட்சிக்கே என கூறியுள்ளனர்.

எங்கள் கட்சி தொண்டர்கள் தன்னலம் பாராமலும், பசியறியாமலும் ஆற்றிய பணிகளால் இன்று தொகுதி முழுவதும் மக்கள் மனித நேய மக்கள் கட்சி பற்றி பேசி வருவதை காணமுடிகிறது.எனது வெற்றி உறுதி என்பதால் மற்ற கட்சியினரிடம் எங்களை பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். என் மேல் தவறான குற்றச்சாட்டுகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு முகவரியில்லாமல் வினியோகிக்கின்றனர். குற்றச்சாட்டு கூறுபவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் பொது மேடையில் விவாதிக்க தயாரா? எனது பொது வாழ்க்கையில் நான் யாருக்கும் எப்போதும் கெடுதல் செய்யவில்லை . என் மீது கூறப்பட்ட குற்றசாட்டை நிருபித்தால், நான் வெற்றி பெற்றால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார்.

மனித நேய மக்கள் கட்சி கடந்த 14 ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளது. 2008 முதல் நடப்பு வரையில் மட்டும் 18 பேர்களுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் ஆம்புலன்ஸ் சர்வீஸ் இலவசமாக செய்துள்ளோம். மாவட்டம் முழுவதும் 10 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவைக்காக நிறுத்தி வைத்துள்ளோம். கண்சிகிச்சை முகாம்கள், பொது மருத்துவ முகாம்கள், சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் போன்ற 20க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தி போலியோ விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியுள்ளோம். ராமநாதபுரம், மண்டபம், பரமக்குடி, போகலூர், கிளியூர், புதுமடம், வேதாளை, பனைக்குளம் போன்ற பகுதிகளில் 564 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.37 லட்சம் கல்வி உதவிகள் வழங்கியுள்ளோம். நோன்பு பெருநாளுக்கு புத்தாடை, உணவு பொருட்கள் என ரூ.7 லட்சம் மதிப்பில் தானம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ராமநாதபுரம், மண்டபம், வேதாளை ஆகிய பகுதிகளில் கல்வி, மருத்துவம், சிறுதொழில் துவங்க நகை ஈடாக பெற்று வட்டியில்லாமல் கடன் வழங்கியுள்ளோம். நான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால், அனைவருக்கும் கல்வி கிடைக்க கல்வி நிதிஉதவி வழங்க முயற்சிப்பேன்.மீனவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் வட்டியில்லா கடன் வழங்கும் வங்கியை துவங்குவேன். கடல் அட்டை மீதான தடையை நீக்க குரல் கொடுப்பேன். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். 6 சட்டசபை தொகுதிகளிலும் தொழிற்சாலை துவங்க நடவடிக்கை எடுப்பேன். தொகுதியில் சாலை வசதிகள், ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கீழக்கரை, சாயல்குடி, தூத்துக்குடி செல்லும் வகையில் ரயில் போக்குவரத்து கொண்டு வர முயற்சி செய்வேன். கடல்சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கடல்சார் பல்கலை., கொண்டு வர முயற்சிப்பேன்.

எங்கள் கட்சி கடந்த 14 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்புமின்றி மக்களுக்காகவே சேவை செய்து வருகிறது. தற்போது முதன்முறையாக அரசியல் ரீதியாக மக்களை சந்திப்பதால், மக்கள் எங்களை முழுமனதோடு ஏற்று கொண்டுள்ளனர்.எங்களுடன் புதிய தமிழகம் கட்சியினரும் சேர்ந்து பணியாற்றுவது எங்களுக்கு வலு. அபிராமம், வீரசோழன், பார்த்திபனூர், பரமக்குடி, எமனேஸ்வரம், பெரியபட்டினம், கமுதி, வேதாளை, மண்டபம், ராமேஸ்வரம், தொண்டி, மணமேல்குடி, மேலபுதுக்குடி, காஞ்சிரங்குடி, நரிப்பையூர், சிக்கல் வாலிநோக்கம் உள்ளிட்ட அனைத்து ஜமாத்துகளிலும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளதுடன், எங்களின் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளனர். மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு சலிமுல்லாகான் கூறினார்

நன்றி: தினமலர்

Monday, May 11, 2009

மத்திய சென்னை தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்: கடைசி நாள் பிரசாரத்தில் ஹைதர்அலி பேச்சு

சென்னை, மே. 11- மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர்அலி இன்று காலையில் ஐஸ்அவுஸ், ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடை விடாமல் பிரசாரம் மேற்கொண்டார்.


அப்போது பேசிய அவர்:-

மத்திய சென்னை தொகுதியில் என்னை வெற்றி பெறச் செய்தால் முன்மாதிரி தொகுதியாக அதனை மாற்றி காட்டுவேன் என்றும், உங்களின் குறைகளுக்காக எந்த நேரத்தில் என்னை அழைத்தாலும் ஓடோடி வருவேன் என்றும் கூறினார்.

முன்னதாக நேற்று வேட்பாளர் ஹைதர்அலிக்கு ஆதரவாக மாநில பொருளாளர் ஆருண்ரஷீத் மோட்டார் சைக்கிள் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இந்த பிரசாரம் திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம் பகுதியில் நடந்தது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தைனியா, மாவட்ட செயலாளர் அப்துல்சலாம், பொருளாளர் கோரிமுகமது, ஒருங்கிணைப்பாளர் சீனி முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

4 தொகுதிகளில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 9 அமைப்புகள் ஆதரவு

சென்னை, மே. 11-மத்திய சென்னை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய 4 தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 9 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்திய தவ்ஹீத்ஜமாத், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம், இந்திய தேசிய லீக், உள்பட 9 அமைப்புகளின் கூட்டமைப்பு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.

கூட்டமைப்பின் தலைவர் அனீபா, முன்னாள் எம்.எல்.ஏ., நிஜாமுதீன், முகமது முனீர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் கூட்டமைப்பின் தலைவர் அனீபா கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய 4 தொகுதிகளிலும் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறது. மற்ற தொகுதிகளில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுப்படி ஒவ்வொரு அமைப்பும் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவதூறு பரப்புவோர் இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும்-தமுமுக தலைவர்

தமுமுக தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளருமான பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் அறிக்கை:

நான் மயிலாடுதுறை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். வாக்கு சேகரிப்பதற்காகவும், ஆதரவு கோரியும் தொகுதியில் உள்ள அனைத்து முக்கியப் பிரமுகர்களையும், மதத் தலைவர்களையும் சந்தித்து வருகிறேன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கிறித்தவ பாதிரியார்கள் என பலரையும் சந்தித்தது போலத்தான் திருவாடுதுறை ஆதினம் அவர்களையும் சந்தித்தேன். திருக்குர்ஆன் மொழியாக்கப் பிரதி ஒன்றை பரிசளித்துவிட்டு அவரிடம் ஆதரவு கோரினேன். அவரும் நான் தேர்தலில் வெற்றி பெற தனது ஆதரவை தெரிவித்தார்.நான் அவரது காலில் விழவும் இல்லை. கையெடுத்து வணக்கம் செய்யவும் இல்லை.

இச்செய்தியைத் ஆதினத்திடம் ஆசி பெற்றதாக அவர்களது பாணியில் தினமணி பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு அவதூறு பரப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சிலர் இச்செய்தியைத் திரித்து ஆதினத்தை நான் வணங்கியது போலவும், அருளாசி பெற்றது போலவும் சித்தரித்து அவதூறுச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

நான் என்னுடைய மாணவப் பருவத்திலிருந்து ஏகத்துவக் கொள்கையை உயிர்மூச்சாகப் பின்பற்றி வருபவன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மட்டமான அரசியல் லாபத்திற்காக சிலர் இவ்வாறான அவதூறுப் பிரச்சாரம் செய்வது வேதனையளிக்கிறது. அவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளட்டும் என்று எச்சரிக்கிறேன்

Sunday, May 10, 2009

துறைமுகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு

மத்திய சென்னை வேட்பாளர் செ.ஹைதர் அலி துறைமுகம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு

திறந்த ஜீப்பில் பிரச்சாரம்.

மேத்தாநகர், அமிஞ்சிக்கரை, செல்லியம்மன் தெரு, தேவகியம்மாள் தெரு, செனாய்நகர், டி.பி.சத்திரம் ரோடு, பரமேஸ்வரன் நகர், கல்லறை சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன், மண்டபம் சாலை, வ.உ.சி. நகர், மகாத்மா காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக திறந்த ஜீப்பில் சென்று ரெயில் என்ஜின் சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.

த.மு.மு.க. தென் சென்னை மாவட்ட செயலாளர் ஹனிபா, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கவுஸ்அலி, ரெட்டை மலை சீனிவாசனார் பேரவை நிறுவனர் நடராஜன், தலித் கலாம் அமைப்பை சேர்ந்த பாஸ்கர், மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் ஹைதர்அலிக்கு ஆதரவு திரட்டினர்.

வாக்காளர்கள் எஸ்எம்எஸ் அனுப்பி வாக்குச் சாவடி பற்றிய தகவல் பெறலாம்

எந்த சாவடியில் வாக்களிப்பது?

வாக்காளர்கள் எஸ்எம்எஸ் அனுப்பி நீங்கள் வாக்கு அளிக்கும் வாக்குச் சாவடி பற்றிய தகவல் பெறலாம்.

சென்னை, மே 10: கிழக்கு பதிப்பகம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய திட்டத்தின் மூலம், வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே மொபைல் போனில் BOOTH என டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் விட்டு தனது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து 575758 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால், வாக்காளர் ஓட்டுப் போட வேண்டிய வாக்குச் சாவடி இடம் மற்றும் வாக்குச் சாவடி எண் பற்றிய விவரம் எஸ்எம்எஸ் மூலம் திரும்ப அனுப்பப்படும்.

இந்த சேவை சென்னை மாநகரில் மட்டும் இப்போது உள்ளது. தென், மத்திய, வடசென்னை வாக்காளர்கள், தங்கள் வாக்குச் சாவடியை இந்த இலவச திட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இராமநாதபுரம் வாக்காளப் பெருங்குடி மக்களே!

மத்திய சென்னை வாக்காளப் பெருமக்களே!

சலீமுல்லாஹ்கானை ஆதரித்து பொதுச் செயலாளர் பிரச்சாரம்.

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகானை ஆதரித்து த.மு.மு.க., மாநில பொது செயலாளர் ஹைதர் அலி பேசியதாவது:இதுவரை 14 முறை லோக்சபா தேர்தலை சந்தித்த மக்கள் வாழும் நிலை மாறவில்லை. பணக்காரன் மேலும் பணக்காரனாக மாறுகிறார். ஏழை ஏழையாகவே உள்ளனர். மக்கள் பிரச்னைகளுக்காக போராடுகிறோம். ஒரு கட்சி ரத்தம் குடிக்க வருகிறது. நாங்கள் முகம், நிறம், சாதி, மதம் பார்க்காமல் ரத்தம் கொடுத்து உதவுகிறோம். ராமநாதபுரம் தொகுதியில் சினிமாவில் நடிப்பவரும், ரத்தம் குடித்து அமைச்சராக இருந்தவரும் ஓட்டு கேட்கின்றனர். இவ்வாறு ஹைதர்அலி பேசினார்.

Friday, May 8, 2009

பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க சகோதரர்கள் விபத்தில் சிக்கினர். 2 பேருக்கு காயம்!

மயிலாடுதுறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க சகோதரர்கள் விபத்தில் சிக்கினர். 2 பேருக்கு காயம்!


மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு ஆதரவாக ம.ம.க., த.மு.மு.க., தொண்டர்கள் உற்சாகத்தோடு களப்பணி ஆற்றி வருகின்றனர். இன்று நோட்டீஸ் வினியோகம் செய்வதற்காக துண்டு பிரசுரங்களோடு 4 மணி அளவில் ம.ம.க சகோதரர்கள் ஆட்டோவில் கும்பகோணத்திலிருந்து சோழபுரம் சென்று கொண்டிருந்தனர். மாணிக்க நாச்சியார் கோவில் என்ற இடமருகே சென்று கொண்டிருதபோது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதனால் ஆட்டோவில் இருந்த சகோதரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சோழபுரத்தை சேர்ந்த தஞ்சை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சகோ. யாசர் என்பவரின் கால் நரம்பு துண்டாகி பெரும் காயம் ஏற்பட்டது. சோழபுரம் கிளை த.மு.மு.க செயலாளர் பக்ருதீனுக்கு கையில் காயம் ஏற்பட்டது.


தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தமுமுகவினர் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றர்.


சகோ. யாசர் ஏற்கெனவே ஒரு கால் ஊனமானவர் அவருக்கு தற்போது மற்றொரு காலிலும் அடிபட்டதால் 5 மணிநேரம் ஆப்ரேசன் செய்ய வேண்டியுள்ளது என மருத்துவர்கள் கூறி விட்டனர். இன்று இரவு ஆப்ரேஷன் நடக்க உள்ளது. காயமடைந்த சகோதரர்களை ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளர் ஜைனுல் ஆபிதின் மற்றும் மற்றும் த.மு.மு.க லி ம.ம.க மாவட்ட நிர்வாகிகள் சென்று நலம் விசாரித்து தேவையான மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்து தந்து வருகின்றனர்.


காயமடைந்த நிலையிலும் தேர்தல் பணிகள் எங்களால் பாதிக்கப்பட்டு விட்டதே என்று அந்த சகோதரர்கள் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. சகோதரர்கள் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.


சகோதர்களின் நலன் விசாரிக்க


9894131996(நசீர்) 9629339953 (சபீர்)

MMK nibbling into Aiyar’s Muslim vote bank

MMK nibbling into Aiyar’s Muslim vote bank

Express News Service
First Published : 08 May 2009 03:53:00 AM IST



http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=MMK+nibbling+into+Aiyar%E2%80%99s+Muslim+vote+bank&artid=AODc7UGZhcw=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=wIcBMLGbUJI=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=MMKs-Manithaneya%20Makkal%20Katchi

NAGAPATTINAM: Two MMKs-Manithaneya Makkal Katchi and Moovendar Munnetra Kazhagam-seem to be playing a crucial role in the poll prospects of Mani Shankar Aiyar, Union Minister and Mayiladuthurai Congress candidate. While the former seems to play the spoilsport, the latter has come for his rescue.


Ever since his political debut in Mayiladuthurai in 1991, Aiyar has maintained a close relationship with the Muslim community. But this time he could face a challenge from Jawahirullah. The Manithaneya Makkal Katchi leader is a well-known person among Muslims is contesting from Mayiladuthurai and has visited the ‘Muslim belts’ in the constituency several times, looking to garner votes. Many youngsters are seen actively working for him.

The Indian Union Muslim League (IUML), part of the DMK-led alliance, has started campaigning for him in Muslim belts to nullify the ‘Jawahirullah effect’. Rajakumar, Aiyar’s close aide and Mayiladuthurai MLA, is busy gathering Muslim leaders to campaign for Aiyar.

On the other hand, Sridhar Vandaiyar’s Moovendar Munnetra Kazhagam, which had parted ways with the AIADMK recently, has also offered its support to the DMK-led alliance. This could prove crucial for Aiyar in winning the votes of the Thevar community which would have otherwise gone en masse to AIADMK’s O S Manian.

மத்தியச் சென்னையில் இரு சக்கர வாகனப் பேரணி மூலம் ம.ம.க ஓட்டு சேகரிப்பு

மத்தியச் சென்னையில் இரு சக்கர வாகனப் பேரணி மூலம் ம.ம.க ஓட்டு சேகரிப்பு

‘Maran aides asked me not to contest’ பேரம் பேசிய தயாநிதி மாறன் கும்பல் அம்பலப் படுத்தும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்...

‘Maran aides asked me not to contest’

Express News Service
First Published : 07 May 2009 03:11:00 AM IST

Last Updated :
07 May 2009 08:07:03 AM IST
http://epaper.newindpress.com/NE/NE/2009/05
/07/ArticleHtmls/07_05_2009_004_001.shtml

மத்திய சென்னையில் போட்டியிடாமல் வேறு தொகுதி மாறினால்....
பேரம் பேசிய தயாநிதி மாறன் கும்பல்
அம்பலப் படுத்தும்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்...

CHENNAI: Manithaneya Makkal Katchi (MMK) leader and central Chennai candidate Hyder Ali, on Wednesday, alleged that DMK candidate Dayanidhi Maran’s associates had asked him not to contest from the central Chennai constituency.

Speaking to The New Indian Express Hyder Ali said, “I and my friends have been approached by people associated with Dayanidhi Maran. They had asked me to not contest from the central Chennai constituency.”

He said that he was offered ‘incentives’ to shift constituency, “They (DMK) promised to take care of my election expenses in any other constituency.”

Rejecting Maran’s chances of winning from central Chennai, he said, “Maran cannot be close to the people, like we are. How can someone who cannot be close to even the party cadre, be close to the people?”

He attributed Maran’s previous victory to the support by the Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK), the predecessor of MMK, “Last time he won because of our support. This time the results of central Chennai are going to be shocking to the State’s political leaders. Moreover, they were exposed due to their family problems and people have realised their true nature.” The Towheet Jamaat’s support for the DMK would further alienate Muslim voters, from the DMK, who form around 30 per cent of the electorate in the constituency according to Ali, “It is good if the Towheet Jamaat expresses support for the DMK. It will influence undecided voters to vote in our favour, because it will be clear to these voters as to who is honest.”

Speaking about AIADMK’s candidate Mohammed Ali Jinnah he said, “The mood is anti-DMK and if Muslim voters want to vote against the DMK they would not prefer the AIADMK. Now we have provided an alternative to them.”

“In any case the people of Tamil Nadu are beyond religious differences and will vote for those who will serve them,” he said.


''தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் எழுச்சி தமிழக அரசியலில் காலகாலமாக கோலோச்சி வரும் ஏதேச்சதிகார வர்க்கத்தினரை பீதியடைய வைத்து புலம்ப வைத்தது.

பரம்பரை பரம்பரையாக மக்களின் தேவைகளை புறக்கணித்து அரசியல் அதிகாரத்தை சுவைத்து வரும் சக்திகளின் பதவி ஆசையையும், பணத்திமிரையும், ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து பேரம் பேசிய ஓர் இழி செயலை மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செ.ஹைதர் அலி தோலுரித்துக் காட்டியுள்ளார்.

07.05.2009 ஆம் தேதி வெளியாகி உள்ள நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வேட்பாளர் ஹைதர்அலியின் நேர்காணல் வெளியாகியிருந்ததது. அதில் மத்திய சென்னை மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் ஹைதர் அலி பேட்டியளித்திருந்தார் அதில்,


ஹைதர் அலி எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் இது குறித்து கூறும்போது ''தன்னையும் தனது சகாக்களையும் தயாநிதிமாறனின் ஆட்கள் அணுகி மத்திய சென்னையில் போட்டியிட வேண்டாம் என வற்புறுத்தியதாக தெரிவித்தார். அதோடு பெரும் தொகை தருவதாகவும் வேறு தொகுதியில் போட்டியிடுங்கள் என்றும், அவ்வாறு வேறு தொகுதியில் போட்டியிட்டால் அதற்கான அனைத்துச் செலவுகளையும் அவர்களே (தயாகும்பல்) பார்த்துக் கொள்வதாகவும், கூறியதாகவும்'' ஹைதர் அலி தெரிவித்தார். மத்திய சென்னையில் தயாநிதிமாறனின் வெற்றி வாய்ப்பை மறுத்த ம.ம.க வேட்பாளர் எங்களைப் போல் மக்களோடு அவர்களால் ஒன்றிப் பழக முடியாது. இணைந்த பணியாற்ற முடியாது. கட்சிக்காரர்களோடு கூட நெருங்கிப் பழக முடியாத ஒருவர், சாதாரண மக்களோடு எவ்வாறு நெருங்கி வருவார் என்றும் செ. ஹைதர் அலி வினா விடுத்தார்.


இதற்கு முன்பு தயாநிதிமாறன் பெற்ற வெற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேராதரவினால் கிடைத்த வெற்றியாகும். இந்த மக்களவைத் தேர்தலின் முடிவு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை வழங்கும். மக்கள் உண்மையை உணர்ந்து விட்டார்கள்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதின் மூலம் முஸ்லிம் வாக்காளர்களை விட்டு திமுக மேலும் அந்நியப்படுத்தி விட்டது. தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததனால் இதுவரை யாருக்கு ஓட்டுப் போடுவது என முடிவெடுக்காமல் இருந்த வாக்காளர்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள். நேர்மையாளர்கள் யார்? என்பதை அது தெளிவு படுத்தும்' என்றார்.


அ.தி.மு.க வேட்பாளர் முஹம்மது அலி ஜின்னாவைப் பற்றி கூறும்போது வாக்காளர்கள் திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். முஸ்லிம் வாக்காளர்கள் தி.மு.கவுக்கு எதிராக வாக்களிப்பார்கள். அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பது குறித்து பரிசீலிக்கவே மாட்டார்கள். நாங்கள் மக்களுக்கு மாற்றத்தினை வழங்குவோம்' என்றார்.

வில்லிவாக்கம் பகுதியில் வாக்குச் சேகரிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் வில்லிவாக்கம் பகுதியில் வாக்குச் சேகரி்த்தபோது...

ம.ம.க. தொண்டர்கள் நாகரீகமானவர்கள்! டைம்ஸ் ஆப் இந்தியா புகழாரம்

ம.ம.க. தொண்டர்கள் நாகரீகமானவர்கள்!
டைம்ஸ் ஆப் இந்தியா புகழாரம்

அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம், மாநாடுகளில் எல்லாம் எவ்வளவு அநாகரீகமாக அதன் தொண்டர்கள் நடந்து கொள்வார்கள் என்பதை பொதுமக்கள் நன்கு அறிவர். மனிதநேய மக்கள் கட்சி தனது தொண்டர்களை கண்ணியமிக்க இளைஞர்களாக உருவாக்கி வைத்திருக்கிறது. கடந்த காலங்களில் தமுமுக நடத்தும் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர், தொண்டர்களின் ஒழுங்கு பற்றிப் பாராட்டிப் பேசியுள்ளனர்.

தற்போது அரசியல் கட்சியாக பரிணாமம் அடைந்த சூழ்நிலையிலும் இதன் தொண்டர் படை நாகரீகம் இழக்கவில்லை. இதனை பொதுமக்கள் கண்டு வருகின்றனர். இந்தியாவின் முதல்தரமான பத்திரிகைகளில் ஒன்றான டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேடு இதனை சுட்டிக் காட்டியுள்ளது.
மத்திய சென்னை ம.ம.க. வேட்பாளர் செ. ஹைதர் அ­ அவர்களின் வாக்கு சேகரிப்பு அணிவகுப்பை சுட்டிக்காட்டி எழுதியுள்ள டைம்ஸ் ஆப் இந்தியா (1.5.2009), ''மனிதநேய மக்கள் கட்சித் தொண்டர்கள் மிகவும் நாகரீகமான முறையில் பேரணியாகச் சென்றனர்'' என்று எழுதியுள்ளது.

பொள்ளாச்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் பொள்ளாச்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு