Showing posts with label இராமநாதபுரம். Show all posts
Showing posts with label இராமநாதபுரம். Show all posts

Tuesday, May 19, 2009

இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பெற்ற வாக்குகளின் விபரங்கள்

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி குறித்த விபரங்கள்

மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் வேட்பாளர் எஸ். சலிமுல்லாகான் பெற்ற வாக்குகள் 21,430

15 வது மக்களவை தேர்தல் 2009


இராமநாதபுரம் தொகுதியில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகியவற்றுடன் புதுக்கோட்டை தொகுதியில் இருந்த அறந்தாங்கியும், விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி என மொத்தம் 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கியதாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி மாறியுள்ளது. கடலாடி சட்டப்பேரவைத் தொகுதி முற்றிலுமாக நீக்கப் பட்டு விட்டது. மறுசீரமைப்பில் புதுக்கோட்டை தொகுதி நீக்கப்பட்டுவிட்டதால் அந்த மாவட்டத்தில் இருந்த அறந்தாங்கி தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது.

பேரவை தொகுதிகளின் விபரம்:
1)அறந்தாங்கி,
2)திருச்சுழி,
3)பரமக்குடி,
4)திருவாடணை,
5)இராமநாதபுரம்,
6)முதுகுளத்தூர்.

முந்தைய 2004 தேர்தலில் பெற்ற வாக்குகளின் விபரம்:
எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன் (திமுக): - 2,35,287
செ.முருகேசன் (அதிமுக): - 2,25,337

சட்டப்பேரவை தொகுதி வாரியக பெற்ற வாக்குகளின் விபரம்.


அறந்தாங்கி: எஸ். சலிமுல்லாகான், மனிதநேய மக்கள் கட்சி (1,489), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (21,658), ஜே.கே. ரித்தீஷ், திமுக (39,460), எஸ். திருநாவுக்கரசர், பா.ஜ.க. (28,917), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (1,745), சிங்கை. ஜின்னா, தேமுதிக (10,456).

திருச்சுழி: எஸ். சலிமுல்லாகான்,ம.ம.க. (1,634), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (42,452), ஜே.கே. ரித்தீஷ், திமுக (56,467), திருநாவுக்கரசர், பாஜக (7,589), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (2,319), சிங்கை. ஜின்னா, தேமுதிக (10,053).

பரமக்குடி: எஸ். சலிமுல்லாகான்,ம.ம.க. (3,637), வ. சத்தியமுர்த்தி, அதிமுக (43,113), ஜே.கே. ரித்தீஷ், திமுக (45,218), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (18,573), பிரிசில்லா பாண்டியன், பகுஜன்சமாஜ் (11,617), சிங்கை. ஜின்னா, தேமுதிக (4,575).

திருவாடானை: எஸ். சலிமுல்லாகான், ம.ம.க. (4,774), வ. சத்தியமுர்த்தி, அதிமுக (31867), ஜே.கே. ரித்தீஷ், திமுக (53,840), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (25,913), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (4,623), சிங்கை. ஜின்னா, தேமுதிக (6,154).

இராமநாதபுரம்: எஸ். சலிமுல்லாகான், ம.ம.க (6,712), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (38,698), ஜே.கே. ரித்தீஷ், திமுக (47,850), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (28,551), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (3,119), சிங்கை. ஜின்னா, தேமுதிக (9,393).

முதுகுளத்தூர்: எஸ். சலிமுல்லாகான், ம.ம.க.(3,184), வ. சத்தியமூர்த்தி, அதிமுக (47,032), ஜே.கே. ரித்தீஷ், திமுக (50,425), எஸ். திருநாவுக்கரசர், பாஜக (18,451), பிரிசில்லா பாண்டியன், பகுஜன் சமாஜ் (15,532), சிங்கை. ஜின்னா, தேமுதிக (8,926).

இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் விபரங்கள்:
மொத்த வாக்குகள் - 11,31,741
பதிவான வாக்குகள்- 7,74,266


1. ஜே.கே. ரித்திஷ் (திமுக) -2,94945
2. வ. சத்தியமூர்த்தி (அதிமுக) -2,25,030
3. எஸ்.திருநாவுக்கரசர் (பா.ஜ.க) -1,28,322
4. பிரிசில்லா பாண்டியன் (பகுஜன் சமாஜ்) -39,086
5. எஸ்.சலிமுல்லாகான் (மனித நேய மக்கள் கட்சி) -21,439
6. எஸ்.சிங்கை ஜின்னா (தேமுதிக) -49,571
7. ஆர்.முகம்மது ஆபித் அலி (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா) -1,496

சுயேச்சை வேட்பாளர்கள்
8.கே.காளிமுத்து -1769
9. எஸ்.சண்முகையா பாண்டியன் -1119
10. எஸ்.சுவார்ட்ஸ் துரை -961
11. கே.செல்லத்துரை -1186
12. பாலமுருகன் -1244
13. பி.பாஸ்கரன் -2330
14. ஜி.முருகேந்திரன்-3471
15. எம்.ஐ.ஜஹாங்கீர்-5870

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 1951 முதல் 2009 வரை வெற்றி பெற்றவர்களில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகமாக 6 முறை வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள், அவர்களை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் விவரம் அடைப்புக் குறிக்குள்:

1951-ம் ஆண்டு -நாகப்பசெட்டியார், காங் -1,09,110, (டி.சுந்தரம், கிஷான் மஸ்தூர்-44118),

1957-ல் பி. சுப்பையா அம்பலம், காங் -89,701, (ஆர்.கே. ராமகிருஷ்ணன், சுயே -50668), 1962-ல் எம். அருணாச்சலம், காங் -1,45,396, (சலிவதீஸ்வரன், சுதந்திரா-114513),

1967-ல் எம். ஷெரீப், சுயே -1,80,392 (எஸ். பாலகிருஷ்ணன், காங் -1,48,367),

1971-ல் பி.கே. மூக்கையாத் தேவர், பார்வர்டு பிளாக் -2,08,431, (எஸ். பாலகிருஷ்ணன், ஸ்தா. காங் -1,39,276),

1977-ல் பி. அன்பழகன், அதிமுக -2,97,612, (எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -1,22,482),

1980-ல் எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -2,75,049, (பி. அன்பழகன், அதிமுக -1,90,916),

1984-ல் வி. ராஜேஸ்வரன் -காங் -2,74,922, (எம்.எஸ்.கே. சத்தியேந்திரன், திமுக -1,74,778),

1989-ல் வி. ராஜேஸ்வரன், காங் -3,98,145, (சுப. தங்கவேலன், திமுக -2,18,601),

1991-ல் வி. ராஜேஸ்வரன், காங் -3,48,415, (காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி, 1,76,889),

1996-ல் எஸ்.பி. உடையப்பன், த.மா.கா -3,31,249, (வி. ராஜேஸ்வரன், காங் -1,35,945),

1998-ல் வி. சத்தியமூர்த்தி, அதிமுக -2,58,978, (எஸ்.பி. உடையப்பன், தமாகா -2,34,886),

1999-ல் கே. மலைச்சாமி, அதிமுக -2,65,253, (எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், திமுக -2,58,607),

2004-ல் எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், திமுக- 2,35,287, (செ. முருகேசன், அதிமுக-2,25,337),

2009-ல் கே. சிவக்குமார் என்ற ஜே.கே. ரித்தீஷ், திமுக -2,94,945, (வி. சத்தியமூர்த்தி, அதிமுக -2,25,030).

தற்போது நடைபெற்று முடிந்துள்ள 15-வது மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி. சத்தியமூர்த்தியை விட கூடுதலாக 69,915 வாக்குகள் பெற்று, ஜே.கே. ரித்தீஷ் வெற்றி பெற்றுள்ளார்.

Tuesday, May 12, 2009

எந்தவித எதிர்பார்ப்புமின்றி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை : ம .நே. ம. க., வேட்பாளர் சலிமுல்லாகான் பேட்டி

எந்த எதிர்பார்ப்புமின்றி மனிதநேய மக்கள் கட்சி 14 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருவதாக அதன் ராமநாதபுரம்வேட்பாளர் சலிமுல்லாகான் தெரிவித்தார்.ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் எங்கள் கட்சியினரை அன்புடன் வரவேற்று, தங்களது ஓட்டு மனித நேய மக்கள் கட்சிக்கே என கூறியுள்ளனர்.

எங்கள் கட்சி தொண்டர்கள் தன்னலம் பாராமலும், பசியறியாமலும் ஆற்றிய பணிகளால் இன்று தொகுதி முழுவதும் மக்கள் மனித நேய மக்கள் கட்சி பற்றி பேசி வருவதை காணமுடிகிறது.எனது வெற்றி உறுதி என்பதால் மற்ற கட்சியினரிடம் எங்களை பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். என் மேல் தவறான குற்றச்சாட்டுகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு முகவரியில்லாமல் வினியோகிக்கின்றனர். குற்றச்சாட்டு கூறுபவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் பொது மேடையில் விவாதிக்க தயாரா? எனது பொது வாழ்க்கையில் நான் யாருக்கும் எப்போதும் கெடுதல் செய்யவில்லை . என் மீது கூறப்பட்ட குற்றசாட்டை நிருபித்தால், நான் வெற்றி பெற்றால் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார்.

மனித நேய மக்கள் கட்சி கடந்த 14 ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளது. 2008 முதல் நடப்பு வரையில் மட்டும் 18 பேர்களுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் ஆம்புலன்ஸ் சர்வீஸ் இலவசமாக செய்துள்ளோம். மாவட்டம் முழுவதும் 10 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவைக்காக நிறுத்தி வைத்துள்ளோம். கண்சிகிச்சை முகாம்கள், பொது மருத்துவ முகாம்கள், சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் போன்ற 20க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தி போலியோ விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியுள்ளோம். ராமநாதபுரம், மண்டபம், பரமக்குடி, போகலூர், கிளியூர், புதுமடம், வேதாளை, பனைக்குளம் போன்ற பகுதிகளில் 564 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.37 லட்சம் கல்வி உதவிகள் வழங்கியுள்ளோம். நோன்பு பெருநாளுக்கு புத்தாடை, உணவு பொருட்கள் என ரூ.7 லட்சம் மதிப்பில் தானம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ராமநாதபுரம், மண்டபம், வேதாளை ஆகிய பகுதிகளில் கல்வி, மருத்துவம், சிறுதொழில் துவங்க நகை ஈடாக பெற்று வட்டியில்லாமல் கடன் வழங்கியுள்ளோம். நான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால், அனைவருக்கும் கல்வி கிடைக்க கல்வி நிதிஉதவி வழங்க முயற்சிப்பேன்.மீனவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் வட்டியில்லா கடன் வழங்கும் வங்கியை துவங்குவேன். கடல் அட்டை மீதான தடையை நீக்க குரல் கொடுப்பேன். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். 6 சட்டசபை தொகுதிகளிலும் தொழிற்சாலை துவங்க நடவடிக்கை எடுப்பேன். தொகுதியில் சாலை வசதிகள், ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கீழக்கரை, சாயல்குடி, தூத்துக்குடி செல்லும் வகையில் ரயில் போக்குவரத்து கொண்டு வர முயற்சி செய்வேன். கடல்சார்ந்த ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கடல்சார் பல்கலை., கொண்டு வர முயற்சிப்பேன்.

எங்கள் கட்சி கடந்த 14 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்புமின்றி மக்களுக்காகவே சேவை செய்து வருகிறது. தற்போது முதன்முறையாக அரசியல் ரீதியாக மக்களை சந்திப்பதால், மக்கள் எங்களை முழுமனதோடு ஏற்று கொண்டுள்ளனர்.எங்களுடன் புதிய தமிழகம் கட்சியினரும் சேர்ந்து பணியாற்றுவது எங்களுக்கு வலு. அபிராமம், வீரசோழன், பார்த்திபனூர், பரமக்குடி, எமனேஸ்வரம், பெரியபட்டினம், கமுதி, வேதாளை, மண்டபம், ராமேஸ்வரம், தொண்டி, மணமேல்குடி, மேலபுதுக்குடி, காஞ்சிரங்குடி, நரிப்பையூர், சிக்கல் வாலிநோக்கம் உள்ளிட்ட அனைத்து ஜமாத்துகளிலும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளதுடன், எங்களின் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளனர். மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு சலிமுல்லாகான் கூறினார்

நன்றி: தினமலர்

Sunday, May 10, 2009

இராமநாதபுரம் வாக்காளப் பெருங்குடி மக்களே!

சலீமுல்லாஹ்கானை ஆதரித்து பொதுச் செயலாளர் பிரச்சாரம்.

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகானை ஆதரித்து த.மு.மு.க., மாநில பொது செயலாளர் ஹைதர் அலி பேசியதாவது:இதுவரை 14 முறை லோக்சபா தேர்தலை சந்தித்த மக்கள் வாழும் நிலை மாறவில்லை. பணக்காரன் மேலும் பணக்காரனாக மாறுகிறார். ஏழை ஏழையாகவே உள்ளனர். மக்கள் பிரச்னைகளுக்காக போராடுகிறோம். ஒரு கட்சி ரத்தம் குடிக்க வருகிறது. நாங்கள் முகம், நிறம், சாதி, மதம் பார்க்காமல் ரத்தம் கொடுத்து உதவுகிறோம். ராமநாதபுரம் தொகுதியில் சினிமாவில் நடிப்பவரும், ரத்தம் குடித்து அமைச்சராக இருந்தவரும் ஓட்டு கேட்கின்றனர். இவ்வாறு ஹைதர்அலி பேசினார்.

Saturday, May 2, 2009

த.மு.மு.க., தலைவர் ஜவாஹிருல்லாஹ் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்.

இராமநாதபுரத்தில் தமுமுக தலைவர் பிரச்சாரம்

ராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகானை ஆதரித்து த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா கீழக் கரை முஸ்லிம் பஜாரில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்," குஜராத் கலவரத்துக்கு எதிர்ப்பு கூட தெரிவிக்காதவர் கருணாநிதி. தி.மு.க., தருவதாக இருந்த ஒரு சீட்டுக்கு ஆசை பட்டிருந்தால் தி.மு.க., வுக்கு நாங்கள் அடிமையாகிருப்போம். சென்னையில் தி.மு.க., வேட்பாளர்கள் ஜெயிப்பதே முஸ்லிம்கள் ஓட்டுகளால் தான்.அ.தி.மு.க., மக்களை ஏமாற்றும் கட்சி'என்றார்.

மேலும் அவர் ராமநாதபுரம் தொகுதியில் திருச்சுழி, காரியாபட்டி, பூலாங்கல், பெருநாழி, சாயல்குடி, ஒப்பிலான், மாரியூர், வாலிநோக்கம், சிக்கல், ஏர்வாடி பகுதியில் பிரசாரம் செய்தார். மாவட்ட பொறுப்பாளர் சல்மான், ஒன்றிய செயலாளர் வாவா ராவுத்தர், சம்சுதீன் சேட், மாவட்ட துணை தலைவர் ஹிமாயுன் கபீர், மாவட்ட தலைவர் சாதிக், தேர்தல் பொறுப்பாளர் சிராஜ் பங்கேற்றனர்.

Friday, May 1, 2009

இராமநாதபுரம் ம.ம.க வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.

இராமநாதபுரம் ம.ம.க வேட்பாளருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
படத்தை பெரிதாக்கி வாசிக்கவும்.

ராமநாதபுரம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி தீவிர வாக்கு சேகரிப்பு

பனைக்குளம்,மே.1 ராமநாதபுரம் தொகுதி யில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

ராமநாதபுரம் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாகான் நேற்று மாநில துணைபொது செயலாளர் தமிழன்அன்சாரி தலைமையில் ராமநாதபுரம் ஒன்றிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் மாநில த.மு.மு.க. பேச்சாளர் சிவகாசி முஸ்தபா, மாவட்ட த.மு.மு.க. துணை தலைவர் தஸ்பிக்அலி, அப்துல் ரசாக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது வேட்பாளர் சலிமுல்லாகான் பேசிய தாவது:
ராமநாதபுரம் தொகுதி இதுவரை எந்த வித வளர்ச்சியும் அடைய வில்லை. சாலைகள் மிக மோசமாக உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை. என்னை வெற்றிபெற செய்தால் ராமநாதபுரம் தொகுதியை ஒரு முன்மாதிரியான தொகுதியாக மாற்ற பாடுபடுவேன். இதுநாள் வரை ஆற்றிவந்த பணிகள் அனைத்தும் மதநல்லிணக்கத்துடன் மனிதநேயத்துடன் செய்யபட்டுள்ளன. ரத்ததான முகாம், ஆம்புலன்சுவசதி கிராமங்களுக்கு குப்பை அள்ளுவதற்கான மூன்று சக்கரவாகனம், வட்டி இல்லாத கடன் திருமண உதவி தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உத விகள் வழங்கப்பட்டு வருகிறது. நான் வெற்றி பெற்றால் இந்த திட்டங்களை மேலும் அதிகப்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறி னார்.

Wednesday, April 29, 2009

இராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் பிரச்சாரம்.

இராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் முதுகுளத்தூரில் பிரச்சாரம்.

மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் வேட்பாளர் கிராமம் கிராமமாகச் சென்று வாக்குச் கேசரிப்பு...

மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் வேட்பாளர் கிராமம் கிராமமாகச் சென்று வாக்குச் கேசரிப்பு...

ஜமாத்தார்களுடன் சந்திப்பு


பொதுமக்களிடம் பிரச்சாரம்.


/